உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்டின் ராஞ்சியில் நடைபெற்ற கிழக்கு மண்டல கவுன்சிலின் 27வது கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை தாங்கினார்.

Posted On: 10 JUL 2025 7:24PM by PIB Chennai

 

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கிழக்கு மண்டல கவுன்சிலின் 27வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஜார்க்கண்ட் முதல்வர் திரு ஹேமந்த் சோரன், ஒடிசா முதல்வர் திரு மோகன் சரண் மாஜி, பீகார் துணை முதல்வர் திரு சாம்ராட் சவுத்ரி மற்றும் மேற்கு வங்க நிதியமைச்சர் திருமதி சந்திரிமா பட்டாச்சார்யா, தலைமைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பு மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கிழக்கு மண்டல கவுன்சிலில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டத்தை ஜார்க்கண்ட் அரசுடன் இணைந்து இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகம் ஏற்பாடு செய்தது.

 

 

கூட்டத்தில் பேசிய அமைச்சர் திரு அமித் ஷா, ஆபரேஷன் சிந்தூரில், நமது படைகள் முழு உலகிற்கும் தங்கள் வீரம், துல்லியம் மற்றும் துணிச்சலை வெளிப்படுத்தி உள்ளன என்றும், அவர்களின் துணிச்சல் மற்றும் வீரத்திற்காக, கிழக்கு மண்டல கவுன்சில் ஒருமனதாக நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது என்றும் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி, வலுவான மன உறுதியை வெளிப்படுத்தியுள்ளார் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதற்கான இந்தியாவின் வலுவான நோக்கத்தை உலகம் முழுவதும் முன்வைத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

 

 

ஜார்க்கண்ட் நிலம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது என்றும், பகவான் பிர்சா முண்டா உட்பட பல சிறந்த சுதந்திரப் போராளிகள் இந்த மண்ணிலிருந்து நாட்டின் சுதந்திர இயக்கங்களை வழிநடத்தியுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.

கூட்டுறவு கூட்டாட்சியின் அடிப்படையில், டீம் பாரத்தின் தொலைநோக்குப் பார்வையை பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்வைத்துள்ளார் என்று திரு. அமித் ஷா கூறினார். டீம் பாரத்தின் தொலைநோக்குப் பார்வையின் கீழ், மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் 2047-க்குள் இந்தியாவை முழுமையாக வளர்ந்த நாடாக மாற்றுவதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சி என்ற இலக்கை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார்.

 

அனைத்து மாநிலங்களின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்புப் படைகளின் துணிச்சலால், நக்சலிசத்திற்கு எதிராக நாம் முன்னெப்போதும் இல்லாத வெற்றியைப் பெற்றுள்ளோம் என்றும், மார்ச் 31, 2026க்குள் நாட்டை நக்சலிசத்திலிருந்து விடுவிப்போம் என்றும் திரு. அமித் ஷா கூறினார். பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகியவை பெருமளவில் நக்சலிசத்திலிருந்து விடுபட்டுள்ளன, அதே நேரத்தில் மேற்கு வங்கம் ஏற்கனவே இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2143826

*****

AD/RB/DL


(Release ID: 2143893) Visitor Counter : 3