ஜல்சக்தி அமைச்சகம்
பொலிவுறு நதி மேலாண்மை குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டம் - மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் தலைமையில் நடைபெற்றது
Posted On:
09 JUL 2025 5:25PM by PIB Chennai
நமாமி கங்கா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள நதிகளுக்குப் புத்துயிர் அளிப்பதற்கான தொழில்நுட்பம், புதுமை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தில்லியில் இன்று உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஆறுகள் குறிப்பாக சிறிய அளவிலான ஆறுகளை நிர்வகிப்பதில் தொழில்நுட்பம், புதுமை நடவடிக்கைகளின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் இடம்பெற்றன.
இந்த உயர்நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளின் சிந்தனைகள், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், அறிவியல் துறையின் பங்களிப்புக்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். ஆறுகளை தூய்மைப்படுத்துவது குறித்த நமாமி கங்கா திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக அமைச்சர் கூறினார். நாட்டில் தூய்மையான, ஆரோக்கியமான, பாதுகாப்பான நதிகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில், முக்கிய ஆறுகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை விரைவுபடுத்தவும், குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்துவதற்கான நவீன உத்திகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2143445
-----
VL/TS/SV/KPG/KR/DL
(Release ID: 2143502)