ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஷில்லாங்கில் உணவு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்த இரண்டு நாள் பிராந்திய பயிலரங்கை தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் நடத்தியது
Posted On:
03 JUL 2025 11:30AM by PIB Chennai
மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தீனதயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமானது மேகாலயாவின் மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து, 2025 ஜூன் 30, ஜூலை 1 ஆகிய தேதிகளில் மேகாலயாவின் ஷில்லாங்கில் உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகியவற்றில் பெண்களின் ஈடுபாடு என்ற தலைப்பில் இரண்டு நாள் பிராந்திய பயிலரங்கை நடத்தியது.
இந்தப் பயிலரங்கு சுயஉதவிக் குழுக்கள் தலைமையிலான உணவு, ஊட்டச்சத்து, சுகாதார நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், மாநிலங்களுக்கிடையிலான பரஸ்பர கற்றலை ஊக்குவித்தல், நாடு முழுவதும் உள்ள சமூகம் சார்ந்த மாதிரிகளை வெளிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் முன்னாள் செயலாளர் திரு என்.என். சின்ஹா, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி ஸ்மிருதி சரண், மேகாலயாவின் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு ராமகிருஷ்ணா சிட்டூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மாநில திட்ட இயக்குநர்கள், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், கோவா, கர்நாடகம், கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, மேற்கு வங்காளம் மற்றும் மேகாலயா ஆகிய 16 மாநிலங்களைச் சேர்ந்த கூட்டு நிலையிலான அமைப்புகளின் தலைவர்கள், சமூக வள மேம்பாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்தப் பயிலரங்கில் பங்கேற்று இருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141731
--
AD/TS/PLM/KPG/KR
(Release ID: 2141827)