தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
சமூகப் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்த இஎஸ்ஐசி ஸ்ப்ரீ 2025-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது
Posted On:
02 JUL 2025 3:13PM by PIB Chennai
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற 196-வது கூட்டத்தின் போது, தொழிலாளர் ஈட்டுறுதிக் காப்பீட்டுக் கழகம், உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பதிவு மேம்பாட்டுத் திட்டத்தை (ஸ்ப்ரீ) அங்கீகரித்துள்ளது.
தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பதிவு மேம்பாட்டிற்கான திட்டம் 2025 என்பது இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பு முயற்சியாகும். இந்தத் திட்டம் 2025 ஜூலை 1 முதல் டிசம்பர் 31, வரை அமலில் இருக்கும்.
உரிமையாளர்கள் தங்களுடைய தொழில் பிரிவுகள் மற்றும் பணியாளர்களை இஎஸ்ஐசி இணையதளம், ஷ்ரம் சுவிதா மற்றும் எம்சிஏ இணையதளம் மூலம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யலாம்.
உரிமையாளர் அறிவித்த தேதியிலிருந்து பதிவு செல்லுபடியாகும்.
பதிவுக்கு முந்தைய காலங்களுக்கு எந்த பங்களிப்பும் அல்லது பயனும் பொருந்தாது.
முன் பதிவு காலத்திற்கு எந்த ஆய்வும் அல்லது கடந்த கால பதிவுகளுக்கான கோரிக்கையும் செய்யப்படாது.
இந்தத் திட்டம் பிந்தைய அபராதங்கள் குறித்த அச்சத்தை நீக்கி பதிவு செயல்முறையை எளிதாக்குவதன் மூலம் தன்னார்வ இணக்கத்தை ஊக்குவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141499
***
AD/TS/IR/KPG/KR/DL
(Release ID: 2141618)