குடியரசுத் தலைவர் செயலகம்
குடியரசுத்தலைவர் இன்று மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்தார்
Posted On:
01 JUL 2025 3:39PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூலை 1, 2025) உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலைக்கழகம் நாட்டின் வளமான பண்டைய மரபுகளின் நவீன மையமாகும் என்று கூறினார். இந்தப் பல்கலைக்கழகம் உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன வசதிகள் தற்போது ஏராளமான மக்களுக்குக் கிடைத்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுமார் 100 ஆயுஷ் கல்லூரிகளும் இதன் சிறப்பால் பயனடைந்து வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
பொது வாழ்வில் மக்களுக்கு சேவை செய்வதில் சுய தேவைகளை விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசுத் தலைவர் தனது சொந்த வாழ்க்கை குறித்து சுருக்கமாக எடுத்துரைத்தார். பொது நலனில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அம்மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடுகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார். திரு யோகி ஆதித்யநாத்தின் அயராத முயற்சிகள் அம்மாநிலத்தில், சுகாதாரம், கல்வி, விவசாய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளதாக அவர் கூறினார். மக்கள் பிரதிநிதிகளால் தொடங்கப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று நிர்வாகிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அவர் கேட்டுக் கொண்டார். எந்தவொரு தொழிலிலும் தொடக்கக் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியது குறித்து அனைவரும் தங்களுக்குள் சுயபரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141159
----
AD/TS/SV/KPG/KR
(Release ID: 2141293)