சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் அரசின் நலத்திட்டங்களை எளிதில் பெறும் வகையில் சுகம்யா பாரத் செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
27 JUN 2025 11:38AM by PIB Chennai
நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதில் சென்றடையும் வகையில் மத்திய அரசின் முதன்மை முயற்சியான சுகம்யா பாரத் செயலி, மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கீழ்கண்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.
பயனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் சாட்பாட் தளம்
அரசின் திட்டங்கள் தொடர்பான புதிய முன்னெடுப்புகள் குறித்த சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள்
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்களின் ஒருங்கிணைப்பு
இம்மாதம் 26-ம் தேதி வரை இந்த செயலியில் மொத்தம் 14,358 பேர் பதிவு செய்துள்ளனர். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்கள் வாயிலாக 83,791 பேர் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். சுகம்யா பாரத் செயலியை தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான கூகிள் பிளே ஸ்டோரிலும், ஐஓஎஸ் தளங்களுக்கான ஆப்பிள் ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்யலாம்.
2021-ம் ஆண்டு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான துறையால் இந்த செயலி தொடங்கப்பட்டது. பொது உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அமைப்புகள் முழுவதிலும் உள்ள சிக்கல்கள் குறித்து புகாரளிக்க ஏதுவாக இந்தத் தளம் செயல்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140077
***
AD/TS/SV/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2140145)
வருகையாளர் எண்ணிக்கை : 17