பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஆட்சேர்ப்பை விரைவுபடுத்தவும் தரவு பாதுகாப்பை வலுப்படுத்தவும் பணியாளர் தேர்வாணையம் மின்னணு ஆவணங்களுடன் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
26 JUN 2025 3:30PM by PIB Chennai
டிஜிட்டல் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பணியாளர் தேர்வாணையம், ஆவணங்களை மின்னணுமயமாக்கியுள்ளது. அமைச்சகங்கள், துறைகள், பிற அரசு நிறுவனங்களுக்கு ஆவணங்களை வழங்கும் செயல்முறை தேர்வாணையத்தின் மின்னணு ஆவண இணையதளத்தைப் பயன்படுத்தி முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தேர்வுகளில் தகுதி பெற்ற நபர்களின் ஆவணங்கள் இப்போது தேர்வாணையத்தால் மின்னணு முறையில் தொகுக்கப்பட்டு, பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் போன்றவற்றின் அதிகாரிகளால் முன் நியமன முறைகளைத் தொடங்குவதற்காக மின்-ஆவண தளத்தில் கிடைக்கச் செய்யப்படுகிறது. தாள் ஆவணங்களிலிருந்து மின்-ஆவணங்களுக்கு மாறுவது பின்வரும் முக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது:
இதன் மூலம் மேம்பட்ட தரவு ஒருங்கிணைப்பு சாத்தியமாகிறது. மின் - ஆவணங்களின் டிஜிட்டல் தன்மை தாள் ஆவணங்கள் சேதப்படுத்தப்படுவதற்கோ அல்லது மாற்றப்படுவதற்கோ உள்ள வாய்ப்பைத் தடுக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2139805
**
AD/TS/PLM/KPG/KR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2139944)
வருகையாளர் எண்ணிக்கை : 17