சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மகாராஷ்டிராவில் உமீத் போர்ட்டல் செயல்பாடு மற்றும் ஹஜ் புனிதப் பயணம் தொடர்பான செயல்பாடுகள் - மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் ஆய்வு
प्रविष्टि तिथि:
22 JUN 2025 12:53PM by PIB Chennai
2025 ஜூன் 6 அன்று ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டுச் சட்டம் தொடர்பான உமீத் (UMEED) மத்திய இணையதளம் தொடங்கப்பட்டது. இந்த சட்டப்பூர்வ தளத்தை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உமீத் போர்ட்டலில் இந்தியா முழுவதும் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வக்ஃப் சொத்துக்களின் விவரங்களும் ஆறு மாதங்களுக்குள் கட்டாயமாக பதிவேற்றப்பட வேண்டும்.
இந்த முயற்சியின்படி, சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சந்திர சேகர் குமார் நேற்று (ஜூன் 21, 2025) மும்பையில் மாநில அரசின் மூத்த அதிகாரிகள், மகாராஷ்டிரா மாநில வக்ஃப் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோருடன் விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். கடந்த வாரம் பீகாரில் இதேபோன்ற ஆய்வுக்குப் பிறகு இது அவரது இரண்டாவது ஆய்வுக் கூட்டமாகும்.
கூட்டத்தின் போது, உமீத் தளம் குறித்து டாக்டர் குமார் அதிகாரிகளுக்கு விளக்கினார். மாநில அதிகாரிகளிடமிருந்து பரிந்துரைகளையும் அவர் பெற்றார். வக்ஃப் வாரியங்களை மேம்படுத்துவதற்கும் வக்ஃப் சொத்து மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் அவர் எடுத்துரைத்தார். சம்பந்தப்பட்ட தரப்பினரின், கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
2025 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றதற்கு இந்திய ஹஜ் குழு (HCoI) அதிகாரிகளுக்கு டாக்டர் குமார் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த ஆண்டு இந்திய ஹஜ் யாத்ரீகர்களிடையே மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இறப்புகள் மற்றும் உடல்நலம் தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். புனித யாத்திரை அனுபவத்தை மேம்படுத்துவதிலும், கள சவால்களை எளிதாக்குவதிலும் ஹஜ் சுவி முக்கிய பங்கு வகித்ததாக செயலாளர் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட ஆலோசனைகள் 2026-ம் ஆண்டு ஹஜ் ஏற்பாடுகளை மேலும் மேம்படுத்த உதவும் என்று அவர் கூறினார்.
****
(Release ID: 2138660)
AD/TS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2138688)
आगंतुक पटल : 14