ஆயுஷ்
11-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்கள் பிரதமர் தலைமையில் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது
Posted On:
20 JUN 2025 5:40PM by PIB Chennai
11-வது சர்வதேச யோகா தினம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகரப்பட்டினத்தில் நடைபெறும் இந்த யோகா நிகழ்ச்சியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கின்றனர். பொது யோகா நெறிமுறை மற்றும் நலவாழ்வு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகா நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இதில் மத்திய ஆயுஷ் மற்றும் சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், அம்மாநில முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பங்கேற்கின்றனர்.
‘யோகா சங்கமம்’ முயற்சியின் கீழ் நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. விசாகப்பட்டினத்தில் பிரதமர் தலைமையில் நடைபெறும் சர்வதேச யோகாதின நிகழ்ச்சியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். காலை 6:30 மணி முதல் 7:45 மணி வரை மாபெரும் மக்கள் இயக்கமாக இந்த யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆந்திர மாநிலம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான முயற்சிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த யோகா நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் அம்மாநில அரசால் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2138049
***
AD/SV/KPG/DL
(Release ID: 2138085)
Visitor Counter : 2