சுரங்கங்கள் அமைச்சகம்
சர்வதேச யோகா தினத்தில் நாடு முழுவதும் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் சார்பில் 50 நிகழ்வுகளுக்கு ஏற்பாடு
Posted On:
19 JUN 2025 2:22PM by PIB Chennai
சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய புவியியல் ஆய்வு மையம் சர்வதேச யோகாக தினமான 2025 ஜூன் 21 அன்று நாடு தழுவிய அளவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற இந்த ஆண்டு கருப்பொருளைப் பிரபலப்படுத்தும் வகையில், புவியியல் ஆய்வு மையம் அதன் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே முழுமையான நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக நாட்டின் 46 இடங்களில் 50 யோகா நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, புவியியல் ஆய்வு மையத்தின் தலைமையகமான கொல்கத்தா அலுவலகம் மண்டல மற்றும் மாநில அலுவலகங்கள், 12 புவி-பாரம்பரிய தளங்கள் உள்ளிட்ட இடங்களில் யோகா அமர்வுகள் நடத்தப்படவுள்ளன. இதில், புவியியல் ஆய்வு மையத்தின் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், உள்ளூர் மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள்.
நாளை (2025 ஜூன் 20) ஹைதராபாதில் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி பங்கேற்கும் சர்வதேச யோகா தினம் தொடர்பான நிகழ்விலும் புவியியல் ஆய்வு மையம் பங்கேற்கவுள்ளது.
***
(Release ID: 2137614)
AD/SMB/PLM/RJ/DL
(Release ID: 2137753)
Visitor Counter : 2