பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தேசிய மின் ஆளுகை சேவை வழங்கல் மதிப்பீட்டின் மாதாந்தர அறிக்கை வெளியீடு
Posted On:
19 JUN 2025 11:40AM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர்ப்புத்துறை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கான தேசிய மின் ஆளுகை சேவை வழங்கல் தொடர்பான மாதாந்தர அறிக்கையின் இருபத்து ஐந்தாவது பதிப்பை வெளியிட்டுள்ளது. இது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மின் ஆளுகை சேவை வழங்குதலின் நிலை குறித்த விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
மே 2025-க்கான அறிக்கையை இந்த இணையதள இணைப்பில் காணலாம்: https://darpg.gov.in/sites/default/files/NeSDA_May_2025.pdf
அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 21,062 மின் சேவைகள் வழங்கப்படுகின்றன. இதில் 7,065 மின் சேவைகள் உள்ளூர் நிர்வாகம் மற்றும் பயன்பாட்டு சேவைகள் துறையின் கீழ் வருகின்றன.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அளித்த அறிக்கை அடிப்படையில் 424 புதிய மின் சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
2,016 கட்டாய மின் சேவைகளில் மொத்தம் 1,599 இப்போது 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இணையதளம் மூலம் கிடைக்கின்றன.
16 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமான முன்னேற்றத்தை அடைந்துள்ளன. மகாராஷ்டிரா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள் 100 சதவீத முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தங்கள் ஒருங்கிணைந்த சேவை வழங்கல் இணையதளங்கள் மூலம் வழங்கும் மின் ஆளுகை சேவைகளின் விவரங்கள் தேசிய மின் ஆளுகை சேவை வழங்கல் மதிப்பீட்டு கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2137563
***
AD/SMB/PLM/RJ/KR/DL
(Release ID: 2137751)