பிரதமர் அலுவலகம்
இந்தியா-கனடா இடையே மக்களுக்கிடையேயான வலுவான தொடர்பை மேம்படுத்துவதற்காக இருநாட்டு பிரதமர்கள் திரு மோடி, திரு கார்னி சந்திப்பு
प्रविष्टि तिथि:
18 JUN 2025 8:02AM by PIB Chennai
ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று கனடா பிரதமர் திரு மார்க் கார்னியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
கனடாவில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு பிரதமராக திரு கார்னி பதவியேற்ற பின் இரு தலைவர்களுக்கும் இடையிலான முதலாவது நேரடி சந்திப்பு இதுவாகும். இந்தியா-கனடா உறவுகளின் நிலை மற்றும் எதிர்கால வழி குறித்து இரு தரப்பினரும் வெளிப்படையான மற்றும் எதிர்கால விவாதங்களை நடத்த இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது.
பகிரப்பட்ட ஜனநாயக மதிப்புகள், சட்டத்தின் ஆட்சியை மதித்தல், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் இந்தியா-கனடா உறவுகளின் முக்கியத்துவத்தை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். விவகாரங்கள் மற்றும் உணர்திறன்களுக்கு பரஸ்பர மரியாதை, மக்களுக்கிடையேயான வலுவான உறவுகள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆக்கபூர்வமான மற்றும் சமநிலையான கூட்டாண்மையைத் தொடர வேண்டியதன் அவசியத்தை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இது சம்பந்தமாக, இரு தரப்பினரும் நட்புறவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர், இருதரப்பு தூதர்களும் தலைநகரங்களுக்கு முன்கூட்டியே திரும்புவது தொடங்கி நம்பிக்கையை மீண்டும் கட்டமைக்கவும், நட்புறவுக்கு உத்வேகம் அளிக்கவும் பல்வேறு களங்களில் மூத்த அமைச்சர்கள் மற்றும் பணி சார்ந்த ஈடுபாடுகளை மீண்டும் தொடங்குவதன் முக்கியத்துவத்தையும் தலைவர்கள் குறிப்பிட்டனர்.
தூய்மையான எரிசக்தி, டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு, திரவ இயற்கை எரிவாயு, உணவுப் பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், உயர்கல்வி, இயக்கம் மற்றும் விநியோகச் சங்கிலி மீள்தன்மை போன்ற துறைகளில் எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பகுதியை ஊக்குவிப்பதில் தங்கள் பகிரப்பட்ட ஆர்வத்தை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்திற்கு வழி வகுக்கும் நோக்கில், தொடக்ககால முன்னேற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிலுவையில் உள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதன் முக்கியத்துவத்தையும் தலைவர்கள் விவாதித்தனர். இந்த விவகாரத்தில் மேலும் ஈடுபட தங்கள் அதிகாரிகளை அறிவுறுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஜி7 உச்சிமாநாட்டில் ஏற்பட்ட முக்கியமான முன்னேற்றத்தையும், பருவநிலை நடவடிக்கை, உள்ளடக்கிய வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி போன்ற உலகளாவிய முன்னுரிமைகளில் ஆக்கபூர்வமாக இணைந்து பணியாற்ற பகிரப்பட்ட விருப்பத்தையும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான மக்களுக்கிடையேயான தொடர்புகளை தலைவர்கள் சுட்டிக்காட்டினார்கள். மேலும் உயிர்ப்புடன் இருக்கும் இந்த இணைப்பை இரு நாடுகளின் நன்மைக்காகப் பயன்படுத்த ஒப்புக்கொண்டனர்.
இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பு கொள்ளவும் ஒப்புக்கொண்டனர், மேலும் விரைவில் இருவரும் மீண்டும் சந்திப்பதை எதிர்நோக்கியுள்ளனர்.
***
(Release ID: 2137065)
VL/IR/SG/KR
(रिलीज़ आईडी: 2137206)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam