நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் யோகா பயிலரங்கு

प्रविष्टि तिथि: 12 JUN 2025 1:14PM by PIB Chennai

சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி நேற்று (2025 ஜூன் 11) தில்லியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் யோகா அறிவியல் துறையின் பேராசிரியர் டாக்டர் ரமேஷ் குமாரின் வழிகாட்டுதலின் கீழ் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் யோகா பயிலரங்கை நடத்தியது. இதில் உரையாற்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் சத்ய பிரகாஷ் தனது உரையில் நமது அன்றாட வாழ்வில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

அமைச்சகத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் இந்த முகாமில் பங்கேற்று,  யோகா, பிராணயாமா பயிற்சிகளைச் செய்தனர். அலுவலக நேரத்தில் யோகா செயல்பாடுகள் மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பது, பணி செயல்திறனை அதிகரிப்பது ஆகியவை குறித்த தகவல்கள் இந்த முகாமில் எடுத்துரைக்கப்பட்டன.

 

***

(Release ID: 2135885)
AD/TS/PLM/RR/KR


(रिलीज़ आईडी: 2135906) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Odia , Telugu