பிரதமர் அலுவலகம்
பல்வேறு நாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் அடங்கிய குழுக்களின் உறுப்பினர்களை பிரதமர் சந்தித்தார்
பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்ததற்காக பிரதிநிதிகளை பிரதமர் பாராட்டினார்
प्रविष्टि तिथि:
10 JUN 2025 9:25PM by PIB Chennai
பல்வேறு நாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் அடங்கிய குழுக்களின் உறுப்பினர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார். அமைதிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும், பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தையும் விவரிப்பதில் இந்த பிரதிநிதிகள் முக்கிய பங்கு வகித்தனர். உலகளாவிய தளங்களில் இந்தியாவின் குரலை முன்னெடுப்பதில் பிரதிநிதிகளின் அர்ப்பணிப்புக்காக அவர்களை திரு. மோடி பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் குறிப்பிட்டதாவது:
“பல்வேறு நாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் அடங்கிய குழுக்களின் உறுப்பினர்களைச் சந்தித்து, அமைதிக்கான இந்தியாவின் உறுதிப்பாடு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விளக்கினேன். அவர்கள் இந்தியாவின் குரலை முன்வைத்த விதத்தில் நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம்.”
***
(Release ID: 2135515)
AD/RB/DL
(रिलीज़ आईडी: 2135527)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada