மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய இளம் விஞ்ஞானிகள் மாநாடு, உலகளாவிய இளையோர் அகாடமியின் ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு திரு தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்

प्रविष्टि तिथि: 10 JUN 2025 2:38PM by PIB Chennai

ஹைதராபாத் ஐஐடி-யில் நடைபெற்ற உலகளாவிய இளம் விஞ்ஞானிகள் மாநாடு மற்றும் உலகளாவிய இளையோர் அகாடமியின் ஆண்டு பொதுக் கூட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று தலைமை தாங்கினார். ஹைதராபாத் ஐஐடி இயக்குநர் பேராசிரியர் பி.எஸ். மூர்த்தி; இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் தலைவர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா; ஹைதராபாத் ஐஐடி ஆளுநர்கள் குழுவின் தலைவர் திரு பி.வி.ஆர். மோகன் ரெட்டி மற்றும் பல பிற பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த இளம் விஞ்ஞானிகளை வரவேற்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது சேர்க்கப்பட்ட உலகளாவிய இளையோர் அகாடமியின் புதிய உறுப்பினர்கள் 30 பேருக்கு திரு. பிரதான் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வை நடத்த இந்தியாவைத் தேர்ந்தெடுத்த உலகளாவிய இளையோர் அகாடமியையும், ஹைதராபாத் ஐஐடியையும் தாம் பாராட்டுவதாக கூறினார். இந்த மாநாடு வெறும் விஞ்ஞானிகளின் கூட்டம் மட்டுமல்ல, மாறாக நம்பிக்கை, நோக்கம் மற்றும் பகிரப்பட்ட விதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு மன்றம் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, வசுதைவ குடும்பகம் - ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் - வெறும் ஒரு முழக்கம் அல்ல, இதுவொரு வாழ்க்கை முறை என்று திரு பிரதான் கூறினார். அறிவியல் என்பது பகிர்தல் மற்றும் கூட்டாண்மை என்பதாக அமைய வேண்டும். காப்புரிமையாக மட்டுமே இருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

விஞ்ஞானிகள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து, மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சூழல்சார் அமைப்புகளையும் தீர்வுகளையும் உருவாக்குவதற்கு தற்போதைய தருணம் மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடுதல் என்ற முயற்சியின் ஒரு பகுதியாக திரு பிரதான், மற்ற பிரமுகர்களுடன் இணைந்து, ஹைதராபாத் ஐஐடி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்த பசுமை இயக்கத்தை வழிநடத்த அனைவரையும், குறிப்பாக வளாகங்களில் உள்ள மாணவர்களை அவர் ஊக்குவித்தார். நிலையான எதிர்காலத்திற்காக இயற்கையைப் பாதுகாப்பதிலும் வளர்ப்பதிலும் ஈடுபடுமாறு மக்களை அவர் வலியுறுத்தினார்.

***

(Release ID: 2135357)
AD/TS/IR/RR/KR


(रिलीज़ आईडी: 2135372) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu , Malayalam