தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் திரைப்படத் திறனாய்வு படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது
प्रविष्टि तिथि:
09 JUN 2025 5:07PM by PIB Chennai
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், புனே-யில் 2025 ஜூன் 23 முதல் ஜூலை 11 வரை நடத்தும் திரைப்படத் திறனாய்வு படிப்பிற்கு (2025 இடை ஆண்டு) விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான திருத்தப்பட்ட கடைசி நாள் தற்போது 2025 ஜூன் 15 (இந்திய நேரப்படி மாலை 6 மணி) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது நாடு முழுவதும் உள்ள திரைப்பட ஆர்வலர்களின் ஆர்வத்தைக் கவனத்தில் கொண்டும் ஜூன் 7-ம் தேதி என்ற முந்தைய காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க தவறவிட்ட ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கம் கொண்டதாக இந்த கால நீட்டிப்பு உள்ளது.
ஆர்வமுடையவர்கள் இந்த இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். https://docs.google.com/forms/d/e/1FAIpQLScJXSd_n0o7n5CBo6yVVRODFgQEx4AcpqeBeSIM8d1LsOJrcQ/viewform
படிப்பிற்கான கட்டணம், தகுதி, கட்டணம் செலுத்தும் முறை ஆகியவை குறித்து https://ftii.ac.in/p/vtwa/film-appreciation-course-mid-year-2025-23-june-11-july-2025 என்ற இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2135150
***
AD/TS/IR/LDN/DL
(रिलीज़ आईडी: 2135201)
आगंतुक पटल : 6