பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்காக கனடா பிரதமர் திரு. மார்க் கார்னியிடமிருந்து பிரதமருக்கு அழைப்பு
                    
                    
                        இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான ஆழமான மக்களிடையேயான  உறவுகளை இரு தலைவர்களும் பாராட்டினார்கள்  
                    
                
                
                    Posted On:
                06 JUN 2025 7:12PM by PIB Chennai
                
                
                
                
                
                
                பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு கனடா பிரதமர் திரு. மார்க் கார்னியிடமிருந்து அழைப்பு வந்தது.
 
உரையாடலின் போது, சமீபத்திய தேர்தல் வெற்றிக்காக  கனடா பிரதமர் திரு. மார்க் கார்னிக்கு  திரு. மோடி வாழ்த்து தெரிவித்தார், மேலும் இந்த மாத இறுதியில் கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.
 
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான ஆழமான மக்களிடையேயான  உறவுகளை இரு தலைவர்களும் பாராட்டினார்கள். மேலும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களால் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
 
உச்சிமாநாட்டில் அவர்களின் சந்திப்பை எதிர்நோக்குவதாக பிரதமர் திரு. மோடி தெரிவித்தார்.
 
சமூக ஊடக எக்ஸ் தள பதிவு ஒன்றில் திரு மோடி கூறியதாவது:
 
"கனடா பிரதமர் திரு. மார்க் கார்னி @MarkJCarney இடமிருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சமீபத்திய தேர்தல் வெற்றிக்காக அவருக்கு  வாழ்த்து தெரிவித்தேன்.  இந்த மாத இறுதியில் கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டிற்கு  அழைப்பு விடுத்ததற்காக நன்றி தெரிவித்தேன். மக்களிடையேயான ஆழமான உறவுகளால் பிணைக்கப்பட்ட துடிப்பான ஜனநாயக நாடுகளாக, இந்தியாவும் கனடாவும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களால் வழிநடத்தப்பட்ட புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் இணைந்து பணியாற்றும். உச்சிமாநாட்டில் எங்கள் சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்." 
***
(Release ID: 2134644)
AD/RB/DL 
                
                
                
                
                
                (Release ID: 2134720)
                Visitor Counter : 4
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam