பிரதமர் அலுவலகம்
செனாப் ரயில் பால கட்டுமானப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
நாட்டிற்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் அவர்களது உறுதியான அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவைகளுக்குப் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
06 JUN 2025 3:01PM by PIB Chennai
செனாப் ரயில் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். நாட்டிற்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் அவர்களது உறுதியான அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
"செனாப் ரயில் பாலத்தின் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட ஒரு சில பணியாளர்களுடன் உரையாடினேன். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அவர்கள், சக இந்தியர்களுக்காக நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் உறுதியான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியுள்ளனர். மிகவும் சவாலான காலங்களில் பணியாற்றுவது உட்பட அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் ஆற்றிய பணி குறித்து அவர்கள் குடும்பங்கள் எவ்வாறு பெருமைப்படுகிறார்கள் என்பது குறித்தும் அவர்கள் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்!"
***
(Release ID: 2134498)
AD/TS/VS/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2134551)
வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam