கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்திய கடல்சார் நிறுவனங்கள் ஒஸ்லோவில் உள்ள நோர் – கப்பல் கட்டும் தளத்தில் கப்பல் கட்டுமானம், பசுமை தொழில்நுட்ப ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன
प्रविष्टि तिथि:
05 JUN 2025 3:37PM by PIB Chennai
இந்திய கடல்சார் தொழில் நிறுவனங்கள் உலகளவிலான நிறுவனங்களுடன் இணைந்து கப்பல் கட்டுமானத் தொழில் மற்றும் எதிர்கால வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஒஸ்லோவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கப்பல் கட்டுமானம், பசுமைத் தொழில்நுட்பம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிகழ்ச்சியில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் கலந்து கொண்டார். 7,500 டன் எடையைத் தாங்கக்கூடிய வகையில் பன்னோக்கு தன்மையுடன் கூடிய 4 கப்பல்களின் கட்டுமானப் பணிகளுக்காக ஜெர்மனியைச் சேர்ந்த கார்ஸ்டன் ரெஹ்டர் ஷிஃப்ஸ் மேக்லர் அண்ட் ரெஹ்டர் நிறுவனமும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் நிறுவனமும் (ஜி.ஆர்.எஸ்.இ) இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் கலப்பின எரிபொருளுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன. அண்மையில் வெளியிடப்பட்ட சைபர் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி இந்த நிறுவனம் கொல்கத்தா கப்பல் கட்டுமானத் தளத்தில் தற்போது தயாரித்து வரும் 8 கப்பல்களுடன் கூடுதலாக இந்த 4 கப்பல்களையும் தயாரிக்க உள்ளது. "துறைமுகங்கள் மற்றும் கப்பல்களின் கட்டுமானம் ஆகிய துறைகளின் மேம்பாட்டுப் பணிகளில் உலகளவிலான நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஏரீஸ் மரைன் எல்எல்சி நிறுவனத்துடன், ஜிஆர்எஸ்இ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், "கடல்சார் கண்டுபிடிப்பு, அதன் விரிவான பாரம்பரியம் மற்றும் எதிர்காலத் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களுடன் இந்தியா இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். நீண்ட கடற்கரைகள், வளமான கடல்சார் மரபுகளைக் கொண்ட பெருமைமிக்க நாடுகளாக உள்ள இந்தியா – ஜெர்மனி இடையேயான நீலப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு இது வித்திடும் என்று கூறினார்.
---
(Release ID: 2134150)
AD/TS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2134230)
आगंतुक पटल : 8