உள்துறை அமைச்சகம்
மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் கழக வளாகத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்காக கட்டப்படும் ஸ்வஸ்தி நிவாஸுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா அடிக்கல் நாட்டினார்
Posted On:
26 MAY 2025 5:59PM by PIB Chennai
மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் கழக வளாகத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்காக கட்டப்படும் ஸ்வஸ்தி நிவாஸுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று அடிக்கல் நாட்டினார். மாநில முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னவிஸ் உட்பட பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நாக்பூரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் நிரந்தர வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டிய உள்துறை அமைச்சர் காணொலி காட்சி மூலம் தற்காலிக வளாகத்தை திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, இந்த புற்றுநோய் மருத்துவமனை மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஷ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் மிகவும் பின்தங்கிய பகுதிகள் நிறைந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய, நடுத்தர, கீழ் நடுத்தர வகுப்புகளைச் சேர்ந்த நோயாளிகள் பயனடைவார்கள் என்றும் கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன் குணப்படுத்த முடியாததாக புற்றுநோய் கருதப்பட்டது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல சிறந்த புற்றுநோய் மருத்துவமனைகள் நிறுவப்பட்டு, அவற்றின் மூலமான முயற்சிகளால் புற்றுநோய் சிகிச்சை அணுகக் கூடியதாக மாற்றப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
2014-ம் ஆண்டு நாட்டில் ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்த நிலையில் தற்போது 23 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 387- ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 780 ஆக அதிகரித்துள்ளது என்றும் 51,000 ஆக இருந்த மருத்துவ படிப்புக்கான இடங்கள் தற்போது 1.18 லட்சமாக அதிகரித்துள்ளன என்றும் திரு அமித் ஷா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2131389
***
AD/SM/SMB/AG/DL
(Release ID: 2131427)
Visitor Counter : 3