தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டம்

प्रविष्टि तिथि: 26 MAY 2025 5:45PM by PIB Chennai

நாடாளுமன்ற உறுப்பினர் திரு ரவிசங்கர் பிரசாத் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் தூதர் அடங்கிய அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்கும் நோக்கத்துடன், 2025 மே 25-27 தேதிகளில் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் செய்கிறது. இந்தக் குழு இன்று மாலை பாரிஸ் நகரை வந்தடைந்தது.

பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள்:

திரு. ரவிசங்கர் பிரசாத், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர், (மக்களவை); முன்னாள் மத்திய சட்டம் மற்றும் நீதி, தகவல் தொடர்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்.

டாக்டர் டக்குபதி புரந்தேஸ்வரி, நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை), முன்னாள் மத்திய வர்த்தகம் & தொழில் & மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர்.

திருமதி. பிரியங்கா சதுர்வேதி, நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழு உறுப்பினர்.

 

திரு. குலாம் அலி கட்டானா, நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), உருது மொழி மேம்பாட்டிற்கான தேசிய கவுன்சில் உறுப்பினர்.

டாக்டர் அமர் சிங், நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை)

திரு. சாமிக் பட்டாச்சார்யா, நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்.

டாக்டர் எம். தம்பிதுரை, நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), முன்னாள் மத்திய சட்டம், நீதி மற்றும் நிறுவனங்கள் விவகார அமைச்சர்

திரு. எம். ஜே. அக்பர், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்.

தூதர் பங்கஜ் சரண், இந்தியாவின் முன்னாள் தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகர், வங்கதேசம், ரஷ்யாவிற்கான முன்னாள் இந்திய தூதர்.

­­பிரான்சில் தங்கியிருக்கும் போது, ​​இந்தக்குழுவினர், செனட் மற்றும் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக சிந்தனையாளர்கள், ஊடகங்கள் மற்றும் அயல்நாடுவாழ் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடுவர்

***

(Release ID: 2131385)

AD/SM/GK/LDN/DL


(रिलीज़ आईडी: 2131421) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam