தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கொரிய குடியரசு நாட்டுக்கு அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு வருகை
प्रविष्टि तिथि:
26 MAY 2025 5:07PM by PIB Chennai
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சஞ்சய் குமார் ஜா தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, கொரியாவுக்கான இந்தியத் தூதர் திரு. அமித் குமாரின் விளக்கத்துடன், ஆபரேஷன் சிந்தூர் குறித்த தங்கள் பணிகளைத் தொடங்கியது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை நிலைப்பாட்டை அவர் எடுத்துரைத்தார்.
கொரியாவில் உள்ள இந்திய சமூகத்துடன் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு உரையாடியது. ஆபரேஷன் சிந்தூர் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டது. ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டதில் பாகிஸ்தானின் பங்கை பிரதிநிதிகள் குழு தெளிவாக விளக்கியது. இந்தியாவில் சமூக ஒற்றுமையை சீர்குலைக்க பாகிஸ்தானின் முயற்சிகளை எடுத்துரைத்தது. இந்தியாவின் ஆரம்ப நிலையிலான பதிலடியும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையும் அளவிடப்பட்டவை மற்றும் பொறுப்பானவை என்பதை நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் எடுத்துரைத்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கை ரீதியான மற்றும் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அவர்கள், பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் இணைந்து இருக்க முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்தினர்.
கொரிய வெளியுறவு முன்னாள் அமைச்சர் டாக்டர் யூன் யங்-க்வான், வெளியுறவு முன்னாள் இணை அமைச்சர் திரு. சோ ஹியூன், இந்தியாவிற்கான கொரிய முன்னாள் தூதர்கள் அம்ப் ஷின் போங்-கில், அம்ப் லீ ஜூன்-கியூ, நாடாளுமன்ற வெளியுறவுக் குழு உறுப்பினர் பிரதிநிதி கிம் கன், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் மேஜர் ஜெனரல் ஷின் சாங்-கியூன் உள்ளிட்ட கொரிய பிரமுகர்களுடன் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு கலந்துரையாடியது. நிதி நடவடிக்கைக்கான பணிக்குழு உள்ளிட்ட சர்வதேச மன்றங்கள் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் எடுத்துரைத்தனர். பயங்கரவாதத்திற்கு எதிராக தீர்க்கமான பதிலடி கொடுக்கும் இந்தியாவின் "புதிய நடவடிக்கை" குறித்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு மீண்டும் உறுதிப்படுத்தியது. பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் காட்ட முடியாது என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர். கொரிய தரப்பும் பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களின் உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் இந்தியாவின் நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டது.
நாளை 27ஆம் தேதி இந்தக் குழு, கொரியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தேசிய சட்டமன்றத்தின் பிரதிநிதிகள், ஆகியோருடன் கலந்துரையாட உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2131353
***
AD/SM/GK/LDN/AG
(रिलीज़ आईडी: 2131419)
आगंतुक पटल : 19