இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டில்லியில், ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டியுடன் உடல்தகுதி இந்தியா நிகழ்வில் ஊடகவியலாளர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மிதிவண்டி ஓட்டினார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2025 6:42PM by PIB Chennai

புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று (2025 , மே 25)  சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக சகோதரர்கள் பங்கேற்ற மிதிவண்டியுடன்  ஞாயிற்றுக்கிழமைகள்  என்ற உற்சாகமான நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள்   அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியாவுடன் சைக்கிள் ஓட்டிய 300-க்கும் அதிகமான உடற்பயிற்சி ஆர்வலர்களின் ஆற்றலை தில்லியின் புயல் சூழ்ந்த வானத்தால் கூட தடுக்க முடியவில்லை.

இந்த நிகழ்வில் தில்லி பத்திரிகையாளர் சங்கத்தினர், தில்லி விளையாட்டுப் பத்திரிகையாளர் சங்கத்தினர், விளையாட்டு வீரர்கள் மற்றும் குடிமக்கள் பங்கேற்றனர். இது நான்கு கிலோமீட்டர் தூரப் பயணமாக இருந்தது. ஊடக வல்லுநர்கள் இந்த அனுபவத்தை "விழிப்புணர்வு அழைப்பு" என்று குறிப்பிட்டனர்.

"மழை இருந்தபோதும் இன்றைய ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பயணம் வெற்றிகரமாக அமைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது பத்திரிகையாளர் நண்பர்கள் முழு மனதுடன் வந்தனர். அதைப் பார்ப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. பத்திரிகையாளர்கள் அமைதியான வாழ்க்கையை அரிதாகவே கொண்டுள்ளனர் - அவர்கள் இரவும் பகலும் வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் படிக்கும் தலைப்புச் செய்திகள் இரவு முழுவதும் அவர்களின் அயராத முயற்சிகளின் விளைவாகும். இந்த முக்கியமான பணியை அவர்கள் தொடர்ந்து செய்ய, ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அதனால்தான் நன்றியைக் காட்டவும், சைக்கிள் ஓட்டுதல் அல்லது ஏதேனும் ஒரு வகையான உடற்பயிற்சி மேற்கொள்வதை  அனைவருக்கும் நினைவூட்டவும் அவர்களை நான் அழைத்தேன் " என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா தனது உரையில் குறிப்பிட்டார்.

"இங்கே எனக்கு ஓர் அற்புதமான அனுபவம் இன்று கிடைத்தது. உடல்தகுதி இந்தியா இயக்கம்இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவற்றின் முன்முயற்சியான மிதிவண்டியுடன்  ஞாயிற்றுக்கிழமைகள் என்பது  ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க ஓர் அருமையான வழியாகும்" என்று தடகள விருந்தினர்டேக்வாண்டோ ஆசிய சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற திருமதி ரோடாலி பருவா கூறினார்.

தில்லி பத்திரிகையாளர் சங்கத் தலைவர் திரு ராகேஷ் தப்லியால், தில்லி விளையாட்டுப் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் திரு அபிஷேக் திரிபாதி உள்ளிட்டோரும் மிதிவண்டிப் பயணத்தில் கலந்துகொண்டனர்.

டிசம்பர் 2024-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த சைக்கிள் ஓட்டும் முயற்சி தற்போது 5,500+ இடங்களில் பரவி மூன்று லட்சத்திற்கும் அதிகமான குடிமக்களைச் சென்றடைந்துள்ளது. திருமதி சானியா மிர்சா, திரு மிலிந்த் சோமன், திரு எம்ரான் ஹாஷ்மி, திரு ஜான் ஆபிரகாம், திரு இம்தியாஸ் அலி, திரு சங்கர் மகாதேவன், திரு தாரா சிங் உள்ளிட்ட பிரபலங்களின் ஒப்புதல்களால் சமூக ஊடகங்கள் பரபரப்பாயின. அவர்கள் அனைவரும் அன்றாட உடல்தகுதியை ஊக்குவிக்க தங்கள் ஆதரவை வழங்கினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131176  

*******

TS/SMB/SG

 


(வெளியீட்டு அடையாள எண்: 2131203) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu