ஆயுஷ்
பாரம்பரிய மருத்துவத் தலையீடுகள் குறித்த ஒரு மைல்கல் ஒப்பந்தத்தின் மூலம் ஆயுஷை உலக அளவில் மைய நீரோட்டத்தில் கொண்டு செல்ல உலக சுகாதார அமைப்புடன் இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது
Posted On:
25 MAY 2025 6:05PM by PIB Chennai
பாரம்பரிய மருத்துவ முறைகளில் உலகளாவிய நிலையை மாற்றும் ஒரு மைல்கல் வளர்ச்சியில், ஆயுஷ் அமைச்சகத்திற்கும் உலக சுகாதார அமைப்புக்கும் இடையே 2025, மே 24 அன்று ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் சர்வதேச சுகாதார தலையீடுகள் வகைப்பாட்டின் கீழ் ஒரு தனிச்சிறப்பான பாரம்பரிய மருத்துவத் தொகுப்புப் பணியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை மனதின் குரல் நிகழ்ச்சியின் 122வது அத்தியாயத்தில் எடுத்துரைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, "நண்பர்களே, ஆயுர்வேதத் துறையிலும் சில நடந்துள்ளது. அதைப் பற்றி அறியும்போது நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள். நேற்று, அதாவது மே 24 ஆம் தேதி, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் மற்றும் எனது நண்பர் துளசி பாய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்துடன், சர்வதேச சுகாதார தலையீடுகள் வகைப்பாட்டின் கீழ் ஒரு தனிச்சிறப்பான பாரம்பரிய மருத்துவத் தொகுப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி அறிவியல் முறையில் ஆயுஷ் உலகம் முழுவதும் அதிகபட்ச மக்களைச் சென்றடைய உதவும்" என்றார்.
இந்த ஒப்பந்தத்தை வரவேற்ற உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ், எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்) கூறியிருப்பதாவது:
"பாரம்பரிய மருத்துவம் மற்றும் சர்வதேச சுகாதார தலையீடுகளின் வகைப்பாடு குறித்த உலக சுகாதார அமைப்பின் @WHO பணிக்கு #இந்தியாவிலிருந்து 3 மில்லியன் டாலர் பங்களிப்புக்கான ஒப்பந்தத்தில் ஆயுஷ் @moAyush செயலாளர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சாவுடன் கையெழுத்திட்டதில் மகிழ்ச்சி. #அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம்."
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131164
******
TS/SMB/SG
(Release ID: 2131183)