ஆயுஷ்
azadi ka amrit mahotsav

2025-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தில் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்; வளர்ந்து வரும் உலகளாவிய ஆர்வத்தையும் இளைஞர்கள் தலைமையிலான கண்டுபிடிப்புகளையும் பாராட்டியுள்ளார்

இந்த முறை யோகா தினத்தை சுவாரஸ்யமான முறையில் கொண்டாடுவது பற்றி யோசித்துப் பாருங்கள்: பிரதமர்

இந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 'யோகா தினம்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது: பிரதமர்

Posted On: 25 MAY 2025 4:49PM by PIB Chennai

11வது சர்வதேச யோகா தினத்திற்கு  ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, 122-வது மனதின் குரல்  நிகழ்ச்சியில், உலகெங்கிலும் உள்ள குடிமக்கள் முழுமையான நல்வாழ்வு மற்றும் துடிப்பான வாழ்க்கைக்கு யோகாவை ஏற்றுக்கொள்ளுமாறு ஊக்கமளிக்கும் வகையில் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் யோகா தினத்திற்கான உற்சாகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். "ஜூன் 21, 2015 அன்று 'யோகா தினம்' தொடங்கியதிலிருந்து, அதன் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த முறையும், யோகா தினம் தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே ஆர்வமும் உற்சாகமும் பெருமளவில் காணப்படுகிறது," என்று அவர் கூறினார். இந்த நிகழ்வைக் கொண்டாடுவது குறித்து ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களிடம் வலியுறுத்தினார். யோகா இணைப்பு சங்கிலிகளை உருவாக்குவது முதல் புகழ்பெற்ற இடங்களில் யோகா பயிற்சி செய்வது வரை, மக்கள் சர்வதேச யோகா தினத்தை ஒரு துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய இயக்கமாக மாற்றி வருகின்றனர்.

பிரதமர் தனது உரையில், ஆந்திரப் பிரதேசத்தின் முயற்சிகளைப் பாராட்டினார். மாநிலத்தில் வலுவான யோகா கலாச்சாரத்தை வளர்க்கும் நோக்கில் யோகா ஆந்திரா இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் 10 லட்சம் யோகா பயிற்சியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநிலங்கள் எவ்வாறு ஆரோக்கியப் புரட்சியில் முன்னணியில் இருந்து வழிநடத்த முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதில் உள்ள தமது உற்சாகத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். தனிப்பட்ட முறையிலும் தேசிய வளர்ச்சியிலும் யோகாவின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

யோகாவில் பெருநிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைப் பாராட்டிய பிரதமர், "நமது பெருநிறுவனங்கள் இதில் பின்தங்கவில்லை. சில நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் யோகா பயிற்சிக்காக தனி இடத்தை ஒதுக்கியுள்ளன. சில புத்தொழில் நிறுவனங்கள் 'அலுவலக யோகா நேரங்களை' அமைத்துள்ளன" என்று கூறினார். இது, நாட்டின் சுகாதார இயக்கத்திற்கு தனியார் துறை எவ்வாறு பங்களிக்கிறது என்பதற்கு ஆக்கபூர்வமான அறிகுறியாகும் என்று அவர் கூறினார்.

யோகா தினக் கொண்டாட்டங்களின் பத்தாண்டுகளை நினைவுகூரவும், சர்வதேச யோகா தினத்தின் 11வது பதிப்பைக் குறிக்கவும், ஆயுஷ் அமைச்சகம் 10 அறிமுக நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முயற்சிகள் பல்வேறு சமூக மற்றும் தொழில்முறை அமைப்புகளில் யோகாவின் அணுகலையும் பொருத்தத்தையும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

அவற்றில், யோகா சங்கம் ஏற்கனவே 6,000-க்கும் அதிகமான நிறுவனங்கள் நிகழ்வுகளை நடத்தப் பதிவு செய்துள்ளன. இது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய சமூகம் சார்ந்த நல்வாழ்வு நிகழ்வுகளில் ஒன்றாகும். இளைஞர்களை மையமாகக் கொண்ட மின்னணு  சாதனங்களில் இருந்து விலகிய யோகா வேகமாக பிரபலமடைந்து வருகிறது. முன்னணி நிறுவனங்கள் அடுத்த தலைமுறை பயிற்சியாளர்களை ஊக்குவிக்க முன்வருகின்றன. இதற்கிடையே, சம்யோகா என்ற ஒரு புரட்சிகரமான  முயற்சியானது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட யோகாவை ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, சித்தா, இயற்கை மருத்துவம், சோவா ரிக்பா எனும் குணப்படுத்தும் அறிவியல் உள்ளிட்ட முக்கிய சுகாதார அமைப்புகளில் ஒருங்கிணைக்க முயல்கிறது.

"யோகா உங்கள் வாழ்க்கையை மாற்றும்" என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ள நிலையில்குடிமக்கள், நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் சர்வதேச யோகா தினம் 2025- அர்த்தமுள்ள மற்றும் புதுமையான வழிகளில் கொண்டாட அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் யோகா அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறுகிறது.

இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆயுஷ் அமைச்சகம் அனைவரையும் அழைக்கிறது. ஜூன் 21-ம் தேதிக்கான கவுன்ட் டவுன் தொடர்கையில், செய்தி தெளிவாகிறது: யோகா என்பது வெறும் பயிற்சி அல்ல - இது தேசிய ஆரோக்கியம், உள் அமைதி மற்றும் உலகளாவிய நல்வாழ்வுக்கான ஓர் இயக்கம்.

*******

(Release ID: 2131149)

TS/SMB/SG


(Release ID: 2131181)