தேர்தல் ஆணையம்
குஜராத், கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தின் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான காலஅட்டவணை
Posted On:
25 MAY 2025 12:12PM by PIB Chennai
குஜராத், கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவைகளில் காலியாக உள்ள ஐந்து இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
குஜராத்தில் திரு கர்சன்பாய் பஞ்சாபாய் சோலங்கி மறைவால் கடி (தனி) தொகுதிக்கும், திரு பயானி பூபேந்திரபாய் கந்துபாய் ராஜினாமாவால் விசாவதார் தொகுதிக்கும், கேரளாவில் திரு பி.வி.
அன்வர் ராஜினாமாவால் நீலாம்பூர் தொகுதிக்கும், பஞ்சாபில் திரு குர்ப்ரீத் பாஸ்ஸி கோகியின் மறைவால் லூதியானா மேற்கு தொகுதிக்கும், மேற்கு வங்கத்தின் திரு நசிருதீன் அகமது மறைவால் காளிகஞ்ச் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் நடைபெறும் சட்டமன்றத் தொகுதியின் முழுமையான அல்லது எந்தப் பகுதியையும் உள்ளடக்கிய மாவட்டத்தில் (மாவட்டங்களில்) நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலுக்கான கால அட்டவணை
அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்படும், வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி மே 26, 2025 (திங்கள்)
வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 2, 2025 (திங்கள்)
வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் தேதி ஜூன் 3, 2025 (செவ்வாய்)
வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி ஜூன் 5, 2025 (வியாழக்கிழமை)
வாக்குப்பதிவு நடைபெறும் தேதி ஜூன் 19, 2025 (வியாழக்கிழமை)
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி ஜூன் 23, 2025 (திங்கள்)
தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் தேதி ஜூன் 25, 2025-க்கு முன்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131081
*******
TS/SMB/SG
(Release ID: 2131148)