தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சைபர் மோசடி தடுப்பு நடைமுறைகளை வலுப்படுத்த "நிதி மோசடி இடர்பாட்டுக் குறிகாட்டி"-யைத் தொலைத்தொடர்புத் துறை அறிமுகப்படுத்துகிறது
Posted On:
21 MAY 2025 4:38PM by PIB Chennai
சைபர் மோசடி மற்றும் நிதி தொடர்பான குற்றச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு முக்கிய படியாக, தொலைத்தொடர்புத் துறை தொடர்புடைய பங்குதாரர்களுடன் "நிதி மோசடி இடர்பாட்டுக் குறிக்காட்டி"-யைப் பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளது. இது சைபர் மோசடி தடுப்பு நடைமுறைகளில் மேம்பட்ட செயல்பாடுகளுடன் கூடிய நுண்ணறிவுடன் நிதி நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் புலனாய்வு தளத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்ட பன்முகப் பரிமாண பகுப்பாய்வு கருவியின் வெளியீடாகும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்துவதற்கான முன்மொழிவின் போது, இந்த கருவியின் துணையுடன் மொபைல் எண்கள் குறிக்கப்பட்டிருந்தால், அது சைபர் பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு சோதனைகளை மேம்படுத்த உதவிடும்.
"நிதி மோசடி இடர்பாட்டுக் குறிகாட்டி" என்றால் என்ன?
இது ஒரு ஆபத்து அடிப்படையிலான அளவீடு ஆகும். இது ஒரு மொபைல் எண்ணை நடுத்தர, உயர் அல்லது மிக அதிக நிதி மோசடி அபாயத்துடன் தொடர்புடையதாக வகைப்படுத்துகிறது. இந்த வகைப்பாடானது இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம், தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் தளம், தொலைத்தொடர்புத் துறையின் சாக்ஷு தளம்,வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் பகிரப்பட்ட உளவுத் தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளின் விளைவாகும். ஒரு மொபைல் எண்ணுக்கு அதிக அளவிலான ஆபத்து இருந்தால் இந்தச் செயலியின் செயல்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கவும் கூடுதல் வாடிக்கையாளர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பங்குதாரர்களுக்கு - குறிப்பாக வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் யுபிஐ சேவை வழங்குநர்களுக்கு இது அதிகாரம் அளிக்கிறது.
அத்தகைய முன்கூட்டிய அறிவிப்பு எவ்வாறு உதவுகிறது?
தொலைத்தொடர்ப்புத் துறையின் டிஜிட்டல் புலனாய்வு பிரிவால் சைபர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது, மறு சரிபார்ப்பு தோல்வியடைந்துள்ளது, பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளை மீறுயுள்ளது போன்ற காரணங்களுக்காக சேவை துண்டிக்கப்பட்ட மொபைல் எண்களின் பட்டியலை (மொபைல் எண் ரத்து பட்டியல்) பங்குதாரர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறது. இந்த எண்கள் பொதுவாக நிதி மோசடிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
சைபர் மோசடிகளில் தவறாகப் பயன்படுத்தப்படும் மொபைல் எண்ணின் ஆயுட்காலம் பொதுவாக சில நாட்கள் வரை மட்டுமே இருக்கும். எனவே அதன் முழு அளவிலான சரிபார்ப்புக்கு பல நாட்கள் ஆகலாம் என்பதால், அத்தகைய எண்களுடன் தொடர்புடைய ஆபத்து குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், சந்தேகிக்கப்படும் மொபைல் எண் ஒரு பங்குதாரரால் அடையாளப்படுத்தப்பட்டவுடன், அது பன்முகப் பரிமாண பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுகிறது. மேலும் அதனுடன் தொடர்புடைய நடுத்தர, உயர் அல்லது மிக அதிக நிதி ஆபத்து என வகைப்படுத்தப்பட்டு, பின்னர், அந்த மொபைல் எண் டிஜிட்டல் புலனாய்வுப் பிரிவின் மூலம் அனைத்து பங்குதாரர்களுடனும் அது தொடர்பான இந்த மதிப்பீட்டை உடனடியாகப் பகிர்ந்து கொள்ள உதவிடுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2130249
******
TS/SV/KPG/KR/DL
(Release ID: 2130333)