குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத் தலைவர் நாளை கோவா பயணம் (2025 மே 20 முதல் 22 வரை
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2025 5:46PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2025 மே 20 முதல் 22 வரை கோவாவில் மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, மே 21 அன்று குடியரசு துணைத் தலைவர் மர்மகோவா துறைமுகத்திற்குச் சென்று, துறைமுகத்தின் புதிய திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து, மர்மகோவா துறைமுக ஆணையத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடுவார். மர்மகோவா துறைமுகத்தில் கடலோர காவல்படை கப்பலில் இந்திய கடலோர காவல்படையின் உயர் அதிகாரிகளுடன் திரு தன்கர் உரையாடுகிறார்.
மே 22 அன்று, குடியரசு துணைத் தலைவர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் - மத்திய கடலோர வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்று, ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129664
•••
TS/IR/LDN/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2129684)
வருகையாளர் எண்ணிக்கை : 16