கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கடல்சார் துறையில் பெண்களுக்கான சர்வதேச தினக் கொண்டாட்டம் - பாலின சமத்துவத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா வலுப்படுத்துகிறது
கடல்சார் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் புதிய முன்முயற்சியை அறிமுகப்படுத்தினார்
Posted On:
18 MAY 2025 6:20PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், கடல்சார் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன், 'சாகர் மெய்ன் சம்மான்' (SMS - எஸ்எம்எஸ்) என்ற முன்முயற்சியைத் தொடங்கி வைத்தார். மும்பையில் இன்று நடைபெற்ற கடல்சார் துறையில் பெண்களுக்கான சர்வதேச தினக் கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அனைத்து கடல்சார் நடவடிக்கைகளிலும் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதே இந்த எஸ்எம்எஸ் முன்முயற்சியின் நோக்கமாகும்.
இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், கடல்சார் அமைப்பு முழுவதும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 100 பெண் கடல்சார் பணியாளர்களுடன் திரு சோனோவால் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இப்போது கடல்சார் துறையில் பெண்களின் பங்களிப்பு 649% வளர்ச்சி அடைந்துள்ளது என்றார். இத்துறையில் பெண்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்தார்.
******
(Release ID: 2129460)
TS/PLM/SG
(Release ID: 2129493)