பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கூட்டாண்மை முறையில் புதிய சைனிக் பள்ளிகளுக்கான நான்காவது சுற்றுப் பதிவிற்கு இணையதளம் தொடங்கப்பட்டது

Posted On: 15 MAY 2025 6:34PM by PIB Chennai

மாநில அரசு/ அரசு சாரா நிறுவனங்கள்/தனியார் துறையுடன் இணைந்து சைனிக் பள்ளி சங்கத்தின் கீழ், 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக, தகுதியுடைய மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பள்ளிகளை பதிவு செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சகம் (https://sainikschoolsociety.in) என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது.

மத்திய அரசின் 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைப்பது என்ற தொலைநோக்குப் பார்வை, தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதும், ஆயுதப் படைகளில் சேருவது உள்ளிட்ட சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்குவது மட்டுமல்லாமல், மாநில அரசு/தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்/தனியார் துறை, நாட்டைக் கட்டமைப்பதில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பையும் வழங்குவதாகும். இதற்காக, பாதுகாப்பு அமைச்சகம் 86 தனியார்/தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்/மாநில அரசு பள்ளிகளை புதிய சைனிக் பள்ளிகளாக அங்கீகரித்துள்ளது.

இந்த புதிய சைனிக் பள்ளிகள், அந்தந்த கல்வி வாரியங்களுடன் இணைந்திருப்பதைத் தவிர, சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் செயல்படும். மேலும் சங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட கூட்டாண்மை முறையில் புதிய சைனிக் பள்ளிகளுக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றும். கூடுதலாக, அவற்றின் வழக்கமான இணைக்கப்பட்ட வாரிய பாடத்திட்டத்துடன், சைனிக் பள்ளி வடிவத்தில் மாணவர்களுக்கு கல்வி-பிளஸ் பாடத்திட்டத்தின் கல்வியையும் அவர்கள் வழங்குவார்கள்.

***

(Release ID: 2128898)

SM/IR/AG/DL


(Release ID: 2128905) Visitor Counter : 9