குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் தேசிய விருது 2024-க்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது
प्रविष्टि तिथि:
15 MAY 2025 4:38PM by PIB Chennai
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம், தொழில்முனைவோரின் சிறந்த செயல்திறனுக்காக அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து, தேசிய அளவில் விருதுகளை வழங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிக்கிறது. தற்போது பல்வேறு பிரிவுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களுக்கு 35 தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. மகளிர் தொழில்முனைவோர் தலைமையிலான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், எஸ்சி/எஸ்டி தொழில்முனைவோர் மற்றும் வடகிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், விருது பெறும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 3.0 லட்சம் (முதல் பரிசு), ரூ. 2.0 லட்சம் (இரண்டாம் பரிசு) மற்றும் ரூ. 1.0 லட்சம் (மூன்றாம் பரிசு) ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
2024-ம் ஆண்டிற்கான தேசிய விருதுக்கான விண்ணப்பங்கள் பல்வேறு பிரிவுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களிடமிருந்து 14.04.2025 முதல் 20.05.2025 வரை தேசிய விருது இணையதளம் (https://dashboard.msme.gov.in/na/Ent_NA_Admin/Ent_index.aspx) மூலம் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை உள்துறை அமைச்சகத்தின் தேசிய விருது இணையதளம் (https://awards.gov.in/) மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். இது குறித்த விவரங்களை www.dcmsme.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128859
***
SM/IR/AG/RJ
(रिलीज़ आईडी: 2128890)
आगंतुक पटल : 14