பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது - பிரதமர்

Posted On: 14 MAY 2025 10:09PM by PIB Chennai

நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளப் பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்றும், அப்பகுதிகளை வளர்ச்சி நடவடிக்கைகளுக்கான தேசிய நீரோட்டத்துடன் இணைப்பதற்கான நடவடிகைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படும் என்றும், இது நம் பாதுகாப்புப் படையினரின் வெற்றியைக் காட்டுவதாக உள்ளது என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவிற்கு சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிலில்;

"பாதுகாப்புப் படைகளின் இந்த வெற்றி, நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவும், அவற்றை வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்துடன் இணைக்கவும் மத்திய அரசு முழு உறுதியுடன் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் திரு. அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில்;

நக்சல் தீவிரவாதத்தை ஒடுக்கி சுதந்திர இந்தியா என்ற உறுதிமொழியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக, சத்தீஸ்கர்-தெலுங்கானா மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள குர்ரகுட்டலு மலைகளில் பாதுகாப்புப் படையினர் 31 முக்கிய நக்சலைட் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். பாதுகாப்புப் படையினரின்  நக்சல் தீவிரவாதத்திற்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கை இது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளின் சிவப்பு ஆட்சி செய்த மலை, இன்று பெருமையுடன் உயர்ந்து நிற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128773

***

SM/SV/RR/RJ


(Release ID: 2128815)