நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை, 2025 ஜூன் 25-க்குள் ‘இந்தியாவின் பருவநிலை நிதி வகைப்பாடு வரைவுக் கட்டமைப்பு’ குறித்து கருத்துகளை வரவேற்கிறது

प्रविष्टि तिथि: 07 MAY 2025 5:53PM by PIB Chennai

இந்தியாவின் பருவநிலை நிதி வகைப்பாட்டை உருவாக்குவதற்கான மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பின்படி, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை, வரைவுக் கட்டமைப்பு தொடர்பாக நிபுணர்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் கருத்துகளை வரவேற்கிறது.

வரைவுக் கட்டமைப்பை https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/may/doc202557551101.pdf என்ற இணையதள இணைப்பில் காணலாம்.

பருவநிலை நிதிக்கான வகைப்பாட்டை உருவாக்குவது நாட்டின் பருவநிலை உறுதிப்பாடுகளை அடைவதற்கும் பசுமை மாற்றத்திற்கும் துணைபுரியும்.

பட்ஜெட் அறிவிப்பின்படி உருவாக்கப்பட்டுள்ள வரைவு கட்டமைப்பில் இந்தியாவின் பருவநிலை செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை வகைப்படுத்துவதற்கான வழிமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதற்கான வழிமுறைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

பருவநிலை நிதி வகைப்பாடு நாட்டின் பருவநிலை நடவடிக்கை இலக்குகள் மற்றும் மாற்றத்திற்கான பாதையுடன் இணைந்த செயல்பாடுகளை அடையாளம் காண ஒரு கருவியாக செயல்படும்.

 

இது தொடர்பான கருத்துகளை 2025 ஜூன் 25-க்குள் aditi.pathak[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்.

பொது ஆலோசனை மூலம் பெறப்படும் கருத்துகள் முறையாக பரிசீலிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும், அதைத் தொடர்ந்து நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை, இந்தியாவின் பருவநிலை நிதி வகைப்பாட்டுக் கட்டமைப்பை வெளியிடும்.

***

(Release ID: 2127562)
TS/PLM/RR/DL


(रिलीज़ आईडी: 2127590) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati