தேர்தல் ஆணையம்
இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் தேர்தல் ஆணையம் நடத்தும் பயிற்சிகளில் பங்கேற்றோர் எண்ணிக்கை 2300-ஐ கடந்துள்ளது
प्रविष्टि तिथि:
07 MAY 2025 3:52PM by PIB Chennai
தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த கள அளவிலான தேர்தல் பணியாளர்களுக்கு தமிழ் மொழியில் பயிற்சி அளிக்கும் மற்றொரு நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் நடைபெற்றுவரும் இந்தப் பயிற்சித் திட்டத்தில் 264 வாக்குச்சாவடி நிலை அலுவலக மேற்பார்வையாளர்கள், 14 தேர்தல் பதிவு அதிகாரிகள், 2 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் உட்பட 293 அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இப்பயிற்சியில் தொடக்க உரை ஆற்றிய, தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், கள அளவிலான தேர்தல் பணியாளர்கள் வாக்காளர்களுடன் தொடர்பு கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் முதலாவது தொடர்பாளர்கள் என்றும், சரியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதில் இவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்றும் கூறினார். கடந்த சில வாரங்களாக இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சித் திட்டங்களில் இதுவரை சுமார் 2,300 பங்கேற்பாளர்கள் பயனடைந்துள்ளனர். இந்த 2 நாள் பயிற்சித் திட்டமானது அடுத்த சில ஆண்டுகளில் நாட்டில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கள அளவிலான பணியாளர்கள் உட்பட அனைத்து நிலைகளிலும் உள்ள தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் விரிவான பயிற்சித் திட்டத்துடன் இசைவானதாக உள்ளது.
படிவம் 6, 7, 8 உள்ளிட்ட பல்வேறு படிவங்களை சரியாக நிரப்புவதை உறுதி செய்வதற்காக, கள அளவிலான அலுவலக மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127514
***
TS/IR/AG/KR
(रिलीज़ आईडी: 2127547)
आगंतुक पटल : 17