தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்தியாவின் வளர்ந்து வரும் படைப்பாற்றல் மையமாக மத்தியப் பிரதேசத்தை எடுத்துக்காட்டும் வேவ்ஸ் 2025 அமர்வு
Posted On:
03 MAY 2025 3:10PM
|
Location:
PIB Chennai
"டிஜிட்டல் கனவுகள் & திரைப்பட பார்வைகள்: மத்தியப் பிரதேசம் அடுத்த படைப்பு மையமாக" என்ற தலைப்பில் உயர்மட்ட அமர்வு இன்று வேவ்ஸ் 2025 இல் நடைபெற்றது. இந்த அமர்வை சர்வதேச நிருபர் நமன் ராமச்சந்திரன் நெறிப்படுத்தினார்.
புகழ்பெற்ற தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏக்தா கபூர் மத்தியப் பிரதேச அரசின் திரைப்பட சுற்றுலா கொள்கை 2025 ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். இந்த அமர்வில் ஏவிஜிசி-எக்ஸ்ஆர் கொள்கை 2025 மற்றும் மத்தியப் பிரதேச திரைப்படப்பிரிவு போர்ட்டலின் இரண்டாம் கட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் பேசிய ஏக்தா கபூர், படபிடிப்புக்காக ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, கட்டணச் சலுகை, அனுமதிகளைப் பெறுவதில் எளிமை, காட்சித் தோற்றம் மற்றும் படப்பிடிப்பு எளிமை போன்ற காரணிகள் மிக முக்கியமானவை என்பதை வலியுறுத்தினார்.
மத்தியப் பிரதேச அரசின் சுற்றுலாத் துறை முதன்மைச் செயலாளர் திரு ஷியோ சேகர் சுக்லா, மத்தியப் பிரதேசம் வியப்பூட்டும் இந்தியாவின் இதயம் என்றும், திரைப்படத் தயாரிப்பாளர்களின் இதயமாகவும் வேகமாக மாறி வருவதாகவும் எடுத்துரைத்தார். மாநிலத்தின் படப்பிடிப்புக்கு ஏற்ற சூழல், வளமான வரலாறு மற்றும் பாரம்பரியம் மற்றும் தயாராக உள்ள திறமையாளர் குழு ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். இந்த மாநிலம் சிறந்த ஊக்க நடவடிக்கை கொள்கைகளில் ஒன்றையும், படப்பிடிப்பு அனுமதிகளுக்கான எளிமைப்படுத்தப்பட்ட ஒற்றை போர்ட்டல் அமைப்பையும் கொண்டுள்ளது. கொள்கை 2.0 யானது அதிகரித்த ஊக்கத்தொகைகள் மற்றும் மீண்டும் மீண்டும் படப்பிடிப்புக்கான சிறப்பு ஏற்பாடுகளுடன் ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். உள்ளூர் மொழிகள் மற்றும் உள்ளூர் திறமைகளைப் பயன்படுத்தும் படங்களுக்கும், ம.பி.யில் படப்பிடிப்பு நடத்தும் பிற இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கும் கூடுதல் சலுகைகள் நீட்டிக்கப்படும்.
மத்தியப் பிரதேச அரசின் ஐடி மற்றும் டிஎஸ்டி துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு சஞ்சய் துபே, புதிய ஏவிஜிசி கொள்கையானது முன் தயாரிப்பு மற்றும் தயாரிப்புக்கு பின்பான பணி ஆகியவற்றை ஆதரிக்கும் என்றும், அனிமேஷன், கேமிங் மற்றும் விஎஃப்எக்ஸ் போன்ற தொடர்புடைய துறைகளை ஊக்குவிக்கும் என்றும் கூறினார். திரைப்பட தயாரிப்பாளர்களை ஆதரிப்பதில் அரசின் முன்வந்து உதவும் அணுகுமுறையை அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126457
****
TS/PLM/RJ
Release ID:
(Release ID: 2126499)
| Visitor Counter:
14