WAVES BANNER 2025
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

"ஜாம்பவான்களும், பாரம்பரியமும்: இந்தியாவின் ஆன்மாவை வடிவமைத்த கதைகள்" என்ற விவாதத்துடன் வேவ்ஸ் 2025 தொடங்கியது

 प्रविष्टि तिथि: 01 MAY 2025 4:32PM |   Location: PIB Chennai

முதலாவது உலக ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு மும்பையின் புகழ்பெற்ற ஜியோ உலக மையத்தில் "ஜாம்பவான்களும், பாரம்பரியமும்: இந்தியாவின் ஆன்மாவை வடிவமைத்த கதைகள்" என்ற தலைப்பில் குழு விவாதத்துடன் தொடங்கியது. இந்த அமர்வு இந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய சினிமா நட்சத்திரங்கள் சிலரை ஒன்றிணைத்தது.

ஹேமமாலினி, மோகன்லால், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை அக்ஷய் குமார் நெறிப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஹேமமாலினி, "இது மத்திய அரசின் அற்புதமான முயற்சி எனவும், இதில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும். பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் சினிமாவின் வளர்ந்து வரும் தன்மை குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார். கலை நோக்கத்துடன் கூடிய சினிமாவுக்கும் பொழுதுபோக்கு சினிமாவுக்கும் இடையேயான கோடு மிகவும் மெல்லியதாக உள்ளது என்று அவர் கூறினார். கலை மற்றும் வணிக சினிமாவை தாம் வேறுபடுத்துவதில்லை எனவும் இவை மக்களின் உணர்வுகளை ஊடுருவும் நகர்த்தும் கதை சொல்லல் என்றும் அவர் கூறினார்.

மூத்த நடிகர் சிரஞ்சீவி தமது சினிமா பயணம் குறித்து பகிர்ந்து கொண்டார். ஒரு கலைஞராக தமது பரிணாம வளர்ச்சியில் மிதுன் சக்ரவர்த்தி, அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் போன்ற சினிமா பிரபலங்களின் ஆழமான தாக்கத்தை அவர் விளக்கனார்.

இந்த விவாதம் தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் பகிரப்பட்ட மரபுகளின் கலவையாக இருந்தது, இது பார்வையாளர்களுக்கு இந்தியாவின் சினிமா ஜாம்பவான்கள் தொடர்பான ஒரு அரிய பார்வையை வழங்கியது.

***

(Release ID: 2125782)

SM/PLM/SG/RJ


रिलीज़ आईडी: 2125840   |   Visitor Counter: 48

इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Assamese , Kannada , Malayalam , Nepali , Marathi , English , हिन्दी , Punjabi , Gujarati , Telugu