மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

தேசிய அதிவேகக் கணினி இயக்கம் - உள்நாட்டு உயர் செயல்திறன் கணினி கணக்கீடு மூலம் இந்தியாவின் எதிர்காலத்தை மேம்படுத்துதல்

Posted On: 28 APR 2025 6:00PM by PIB Chennai

"ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆகியவற்றின் மூலம் தற்சார்பு என்பதே இந்தியாவின் தாரக மந்திரம்."

- பிரதமர் நரேந்திர மோடி

 

அறிமுகம்:

 

தேசிய அதிவேகக் கணினி இயக்கம் (நேஷனல் சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன் -NSM) என்பது உயர் செயல்திறன் கணினி (HPC) திறன்களுடன் நாட்டை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் முதன்மை முயற்சியாகும். 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தப் பணி, சூப்பர் கம்ப்யூட்டிங்கில் இந்தியாவின் தொழில்நுட்ப வலிமையை மேம்படுத்துதல், ஆராய்ச்சி - மேம்பாட்டை வளர்ப்பது, கல்வி, தொழில், அரசுத் துறைகளில் அறிவியல் முன்னேற்றங்களை ஆதரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

தற்போதைய நிலையும் இதன் சாதனைகளும்:

 

*தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் கீழ், மார்ச் 2025 நிலவரப்படி, 35 பெட்டாபிளாப்ஸ் ஒருங்கிணைந்த கணினி திறன் கொண்ட மொத்தம் 34 சூப்பர் கம்ப்யூட்டர்கள், பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆய்வகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

*இந்த இயக்கத்தின் கீழ் சூப்பர் கம்ப்யூட்டிங் அமைப்புகள் 85 சதவீதத்துக்கும் அதிகமான ஒட்டுமொத்த பயன்பாட்டு விகிதத்தை அடைந்துள்ளன.

 

ஆராய்ச்சி - மேம்பாட்டுத் (R&D) துறையில் இந்த சூப்பர் கம்ப்யூட்டிங் அமைப்புகளின் பங்களிப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், ஆய்வகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு இது உதவுகிறது .

 

*இந்த சூப்பர்கம்ப்யூட்டிங் அமைப்புகள் மருந்து கண்டுபிடிப்பு, பேரிடர் மேலாண்மை, எரிசக்திப் பாதுகாப்பு போன்ற முக்கியமான களங்களில் ஆராய்ச்சகளை ஆதரிக்கின்றன.

 

* இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டிங் வசதிகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் ஆராய்ச்சி நடத்துவதற்கான வாய்ப்புகளை தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கம் உருவாக்கியுள்ளது.

 

இந்தியா செமிகண்டக்டர் இயக்கம் மூலம் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தை வலுப்படுத்துதல்:

 

இந்தியா செமிகண்டக்டர் இயக்கம் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்துக்கு  பெரிய அளவில் ஊக்கத்தை அளிக்க உள்ளது. சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கு செயலிகள், மெமரி சில்லுகள், சிறப்பு முடுக்கிகள் போன்ற சக்திவாய்ந்த பாகங்கள் தேவை. இவை அனைத்தும் மேம்பட்ட குறைக்கடத்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இப்போது வரை, இந்த பாகங்களுக்கு, இறக்குமதியை இந்தியா பெரிதும் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

 

செமிகண்டக்டர் இயக்கம் மூலம், இந்த உயர் தொழில்நுட்ப பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதில் இந்தியா கவனம் செலுத்துகிறது. இது சூப்பர் கம்ப்யூட்டர்களை வேகமாகவும், அதிக ஆற்றல் திறன் கொண்டதாகவும், மிகவும் மலிவு விலையிலும் மாற்றும்.

 

தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கம் என்பது உலகளாவிய சூப்பர் கம்ப்யூட்டிங்கில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும் ஒரு சிறந்த முயற்சியாகும். உள்நாட்டு வளர்ச்சி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம், இந்த இயக்கம் முக்கியமான துறைகளை ஆதரித்து, எதிர்கால சவால்களுக்கு தேசத்தை தயார்படுத்துகிறது. உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங்கில் உலகளாவிய முன்னணி நாடாக மாற இந்தியா தயாராக உள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2124920

https://nsmindia.in/

https://ism.gov.in/

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666447

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2081061

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1800356

https://dst.gov.in/pm-launches-country-1st-indigenously-build-supercomputer

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2087506

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2088268

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AU2084_k8K63G.pdf?source=pqals

https://sansad.in/getFile/annex/267/AU3905_rZLY5P.pdf?source=pqars

***

 

TS/PLM/AG/DL


(Release ID: 2124953) Visitor Counter : 17
Read this release in: English , Urdu , Hindi , Gujarati