பாதுகாப்பு அமைச்சகம்
மொரிஷியஸின் போர்ட் லூயிஸில் ஐஓஎஸ் சாகர்
Posted On:
27 APR 2025 3:10PM by PIB Chennai
2025, ஏப்ரல் 05 அன்று கார்வாரில் இருந்து புறப்பட்ட இந்திய கடற்படைக் கப்பலான சுனைனா (IOS SAGAR), இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் ஒன்பது நட்பு நாடுகளைச் சேர்ந்த 44 கடற்படை வீரர்களைக் கொண்டுள்ளது, இதில் மொரிஷியஸ் குடியரசைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் ஆறு மாலுமிகள் உள்ளனர்.
இந்த முயற்சி கூட்டு வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு உணர்வில், பரஸ்பர செயல்பாடு, பரஸ்பர கற்றல் மற்றும் பிராந்திய கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான இந்திய கடற்படையின் தொடர்ச்சியான முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தியா- மொரிஷியஸ் இடையே நெருக்கமான மற்றும் நீண்டகால பிணைப்புகளை பிரதிபலிக்கும் வகையில், கப்பலும் அதன் குழுவினரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டனர். வரவேற்பு விழாவில் காவல்துறை ஆணையர் திரு ஆர் சுரூஜபல்லி ,பிரதமர் அலுவலகம், மொரிஷியஸ் காவல் படை, இந்திய ஹைகமிஷனர் அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வரவேற்பு விழா முடிந்ததும், பிரமுகர்கள் கப்பலை சுற்றிப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து நட்பு நாடுகளிலிருந்து புறப்பட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கப்பல் 2025, ஏப்ரல் 27 அன்று பார்வையாளர்களுக்குத் திறந்திருக்கும். போர்ட் லூயிஸில் கப்பல் தங்கியிருக்கும் போது மலையேற்றம், கூட்டு யோகா அமர்வு, நட்பு விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் கூட்டு கண்காணிப்பின் இரண்டாம் கட்டத்தை முடித்ததும், செஷெல்ஸின் போர்ட் விக்டோரியாவுக்குப் புறப்பட்டுச் செல்லும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124711
******
SMB/SG
(Release ID: 2124723)
Visitor Counter : 29