தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வறுமையை ஒழிப்பதில் இந்தியாவின் வெற்றி

Posted On: 26 APR 2025 4:40PM by PIB Chennai

கடந்த தசாப்தத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாக இந்தியா, 171 மில்லியன் மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டுள்ளது. உலக வங்கி தனது 2025 வசந்த கால வறுமை மற்றும் சமத்துவ அறிக்கையில் வறுமைக்கு எதிரான இந்தியாவின் தீர்க்கமான போராட்டத்தை ஒப்புக்கொள்கிறது. இந்த அறிக்கையின்படி, தீவிர வறுமைக்கு சர்வதேச அளவுகோலான ஒரு நாளைக்கு 2.15 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக வாழும் மக்களின் விகிதம், 2011-12-ல் இருந்த  16.2 சதவீதம் என்பதிலிருந்து 2022-23-ல் வெறும் 2.3 சதவீதம் எனக் கடுமையாகக் குறைந்துள்ளது.

இந்த சாதனை, கிராமப்புறங்களிலும்  நகர்ப்புறங்களிலும் கவனம் செலுத்திய, உள்ளடக்கிய வளர்ச்சிக்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நலத்திட்டங்கள், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான அதிகரித்த அணுகல் மூலம், வறுமை அளவைக் குறைப்பதில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. உலக வங்கியின் 2025 வசந்த கால வறுமை மற்றும் சமத்துவ அறிக்கை, இந்த முயற்சிகள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை எவ்வாறு கணிசமாக மாற்றியுள்ளன, நாடு முழுவதும் வறுமை இடைவெளியைக் குறைத்துள்ளன என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

உலக வங்கியின் இந்தியாவிற்கான வறுமை மற்றும் சமத்துவ சுருக்கம், தீவிர வறுமையில் கூர்மையான குறைப்பு பரந்த அடிப்படையிலானது என்றும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளை உள்ளடக்கியது என்றும் கண்டறிந்துள்ளது.

கிராமப்புறங்களில், தீவிர வறுமை 2011-12-ல் 18.4 சதவீதம் என்பதிலிருந்து 2022-23-ல் 2.8 சதவீதமாகக் குறைந்தது.

நகர்ப்புறங்களில், அதே காலகட்டத்தில் தீவிர வறுமை 10.7 சதவீதம் என்பதிலிருந்து 1.1 சதவீதமாகக் குறைந்தது

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வறுமைக்கு இடையிலான இடைவெளி 7.7 சதவீதம் என்பதிலிருந்து 1.7 சதவீதமாக சுருங்கியது. 2011-12 மற்றும் 2022-23 க்கு இடையில்  சரிவு விகிதம் ஆண்டுக்கு 16 சதவீதமாகும்.

2011-12 ஆம் ஆண்டில், அதிக மக்கள் தொகை கொண்ட ஐந்து மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகியவை இந்தியாவின் மிகவும் ஏழைகளில் 65 சதவீதத்தைக் கொண்டிருந்தன.

2022-23 ஆம் ஆண்டு வாக்கில், இந்த மாநிலங்கள் தீவிர வறுமையில் ஒட்டுமொத்த சரிவில் மூன்றில் இரண்டு பங்கிற்கு பங்களித்தன.

நகர்ப்புற வேலையின்மை நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.6 சதவீதமாகக் குறைந்தது, இது 2017-18 க்குப் பிறகு மிகக் குறைவு.

சமீபத்திய தரவுகள் 2018-19 க்குப் பிறகு முதல் முறையாக ஆண் தொழிலாளர்கள் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு மாறுவதைக் குறிக்கின்றன, அதே நேரத்தில் விவசாயத்தில் கிராமப்புற பெண் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

சுயதொழில், குறிப்பாக கிராமப்புற தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிகரித்து, பொருளாதார பங்கேற்புக்கு பங்களிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124545

*****

 

SMB/SG


(Release ID: 2124595) Visitor Counter : 23
Read this release in: English , Urdu , Hindi , Gujarati