பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வேலைவாய்ப்புத் திருவிழாவின் ஒரு பகுதியாக, அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் ஏப்ரல் 26 அன்று நியமனக் கடிதங்களை வழங்குகிறார்

Posted On: 25 APR 2025 6:55PM by PIB Chennai

பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஏப்ரல் 26 அன்று காலை 11 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் வழங்குவார். இந்த நிகழ்ச்சியில் திரண்டிருப்பவர்களிடையே அவர் உரையாற்றுகிறார்.

 

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, 15-வது வேலைவாய்ப்புத் திருவிழா நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெறும். இது இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு திறம்பட பங்களிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும்.

 

நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நியமிகள், வருவாய் துறை, பணியாளர் மற்றும் பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம், உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, உயர் கல்வித் துறை, ரயில்வே அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளில் பணியில் சேர்வார்கள்.

***

RB/DL


(Release ID: 2124419) Visitor Counter : 30