தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்

Posted On: 25 APR 2025 12:56PM by PIB Chennai

"ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில்  ஏப்ரல் 22 அன்று 28 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியால் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது.

பள்ளத்தாக்கில் விடுமுறையைக் கழிக்கச் சென்ற நிராயுதபாணிகளான அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை ஆணையம் கண்டிக்கிறது. பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மனித உரிமைகளை மீறி நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம்   நியாயமாக சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.

உலகில் மனித உரிமை மீறல்களுக்கு தீவிரவாதம் மிகப்பெரிய காரணங்களில் ஒன்று என்று பல்வேறு மன்றங்களில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது. தீவிரவாதத்திற்கு உதவுபவர்கள், உடந்தையாக இருப்பவர்கள், ஆதரிப்பவர்கள் மற்றும் முன்னெடுத்துச் செல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், இந்த அச்சுறுத்தலுக்கு அவர்களை பொறுப்பேற்க வைப்பதற்கும் நேரம் வந்துவிட்டது. இல்லையெனில், அது ஜனநாயக வெளியைச் சுருக்குவதற்கும் அச்சுறுத்தல்கள், பழிவாங்கல்கள், சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் வாழ்வுரிமை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் வழிவகுக்கும்.

 

பொறுப்புடைமையை நிர்ணயிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுப்பதுடன், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

(Release ID: 2124223)
TS/PKV/RR/KR

 

 


(Release ID: 2124269) Visitor Counter : 34