உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்

Posted On: 23 APR 2025 9:17PM by PIB Chennai

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர்  திரு அமித் ஷா இன்று இறுதி மரியாதை செலுத்தினார். பயங்கரவாதத்திற்கு பாரதம் வளைந்து கொடுக்காது என்றும், இந்தக் கோழைத்தனமான தாக்குதலின் குற்றவாளிகள் தப்ப முடியாது  என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களையும் திரு அமித் ஷா சந்தித்தார். பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் அன்புக்குரியவர்களை இழந்ததன் வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள் என்றும், இந்தத் துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்த இடத்தைப்  பார்வையிட்ட அமைச்சர், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடமிருந்து விரிவான விளக்கத்தைப் பெற்றார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் திரு ஷா சந்தித்தார், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

***

(Release ID: 2123972)


RB/DL


(Release ID: 2123977) Visitor Counter : 20