வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புகையிலை விவசாயிகளுக்கு நிவாரணம்: விவசாயிகள் பதிவு மற்றும் சேமிப்பிட உரிமங்கள் செல்லுபடியாகும் காலத்தை அரசு 3 ஆண்டுகளாக அறிவித்துள்ளது

Posted On: 22 APR 2025 6:06PM by PIB Chennai

வெர்ஜீனியா புகையிலை பயிரிடுபவர் என்ற பதிவுச் சான்றிதழை ஆண்டுதோறும் புதுப்பித்தல் மற்றும் சேமிப்பிடம் இயக்குவதற்கான உரிமச் சுமையைக் குறைக்கும் வகையில், பதிவுச் சான்றிதழ் புதுப்பித்தலை ஓராண்டுக்குப் பதிலாக 3 ஆண்டுகளாக ஆக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கும் நடைமுறைக்கு பதிலாக பதிவுகள் / உரிமங்கள் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களில் சுமார் 91,000 சேமிப்பிடங்களை உள்ளடக்கிய சுமார் 83,500 விவசாயிகள் தங்கள் பதிவுகள் / உரிமங்களை புதுப்பிக்க ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை கால இடைவெளியை உயர்த்துவதற்கு இந்த திருத்தம் பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்தியா 2-வது பெரிய புகையிலை உற்பத்தியாளராகவும், 4-வது பெரிய புகையிலை ஏற்றுமதியாளராகவும் (2023 ஆம் ஆண்டில் மதிப்பு அடிப்படையில்) உள்ளது. 2024-25 நிதியாண்டில், புகையிலை ஏற்றுமதி இந்திய கருவூலத்திற்கு 1979 அமெரிக்க டாலர் (ரூ.16,728 கோடி) பங்களிப்பு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2123534

***

TS/SMB/AG/DL


(Release ID: 2123564) Visitor Counter : 22