பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் நடைபெற்ற 'ஜஹான்-இ-குஸ்ரோ 2025' நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 28 FEB 2025 10:10PM by PIB Chennai

டாக்டர் கரண்சிங் அவர்களே, முசாபர் அலி அவர்களே, மீரா அலி அவர்களே, இந்த நிகழ்ச்சியில் குழுமியிருக்கும் இதர பிரமுகர்களே,

பெரியோர்களே, தாய்மார்களே!,

இன்று ஜஹான்-ஏ-குஸ்ருவுக்கு வந்த பின் மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் இயல்பானது. இதுபோன்ற விழாக்கள் நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு முக்கியமானவை, இவை ஆறுதலையும் அளிக்கின்றன. ஜஹான்-ஏ-குஸ்ரு தொடர் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 25 ஆண்டுகளில் இந்த நிகழ்ச்சி மக்கள் மனதில் ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது என்பது அதன் மிகப்பெரிய வெற்றியாகும். இதற்காக டாக்டர் கரண் சிங் அவர்களுக்கும், எனது நண்பர் முசாபர் அலி அவர்களுக்கும், சகோதரி மீரா அலி அவர்களுக்கும், மற்றர்களுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜஹான்-ஏ-குஸ்ருவின் இந்த பூங்கொத்து தொடர்ந்து மலர ரூமி அறக்கட்டளைக்கும், உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புனித ரமலான் மாதமும் தொடங்க உள்ளது. உங்கள் அனைவருக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் ரமலான் முபாரக் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நான் சுந்தர் நர்சரிக்கு வந்திருக்கிறேன், எனவே மேன்மை தங்கிய இளவரசர் கரீம் ஆகா கானை நினைவு கூர்வது எனக்கு மிகவும் இயல்பானது. சுந்தர் நர்சரியை அலங்கரிப்பதிலும் அழகுபடுத்துவதிலும் அவரது பங்களிப்பு லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.

 

நண்பர்களே,

ஜஹான்-இ-குஸ்ராவின் இந்த நிகழ்வில் ஒரு வித்தியாசமான நறுமணம் உள்ளது. இந்த மணம் இந்துஸ்தான் மண்ணின் மணம். ஹஸ்ரத் அமீர் குஸ்ரு சொர்க்கத்துடன் ஒப்பிட்டது ஹிந்துஸ்தானம். நமது இந்துஸ்தான் அந்த சொர்க்கத் தோட்டம், அங்கு கலாச்சாரத்தின் அனைத்து வண்ணங்களும் தழைத்தோங்கியுள்ளன. இங்குள்ள மண்ணின் தன்மையில் ஒரு சிறப்பு உள்ளது. அதனால்தானோ என்னவோ, சூஃபி மரபு இந்தியாவுக்கு வந்தபோது, அது தனது சொந்த நிலத்துடன் இணைக்கப்பட்டதைப் போலவும் உணர்ந்தது. இங்கு, பாபா ஃபரீதின் ஆன்மீக சொற்பொழிவுகள் இதயங்களுக்கு அமைதியைத் தந்தன. ஹஸ்ரத் நிஜாமுதீன் அவர்களின் கூட்டம் அன்பு தீபங்களை ஏற்றி வைத்தது. ஹஸ்ரத் அமீர் குஸ்ருவின் வார்த்தைகள் புதிய முத்துக்களைக் கோர்த்தன. அதன் விளைவு ஹஸ்ரத் குஸ்ருவின் புகழ்பெற்ற வரிகளில் வெளிப்பட்டது.

சூஃபி பாரம்பரியம் இந்தியாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டது. சூஃபித் துறவிகள் மசூதிகளுடனோ அல்லது கான்காக்களுடனோ தங்களை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் புனித குர்ஆனின் எழுத்துக்களைப் படித்தனர், வேதங்களையும் கேட்டனர். அவர்கள் பக்திப் பாடல்களின் இனிமையை அஸானின் ஒலியுடன் சேர்த்தனர், இன்று ஜஹான்-ஏ-குஸ்ரு அதே பாரம்பரியத்தின் நவீன அடையாளமாக மாறியிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களே,

இந்த பாரம்பரியத்தை நாம் தொடர்ந்து வளப்படுத்த வேண்டும். ஜஹான்-ஏ-குஸ்ரு போன்ற முயற்சிகள் இந்தப் பொறுப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகின்றன என்பதிலும், இந்தப் பணியை 25 ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருவது என்பது சிறிய சாதனை அல்ல என்பதிலும் நான் திருப்தி அடைகிறேன். நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன். சில சிரமங்களுக்கு இடையிலும், இந்த விழாவை அனுபவிக்க எனக்கு சில வாய்ப்புகள் கிடைத்தன, இதற்காக எனது நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி! மிக்க நன்றி!

***

(Release ID: 2107157)

SMB/AG/KR

 


(रिलीज़ आईडी: 2123385) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam