பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சவூதி அரேபியா பயணத்தையொட்டி பிரதமரின் புறப்பாட்டு அறிக்கை

Posted On: 22 APR 2025 8:30AM by PIB Chennai

பட்டத்து இளவரசரும், பிரதமருமான மேதகு இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நான் சவுதி அரேபியாவுக்கு  புறப்பட்டுச் செல்கிறேன்.

சவுதி அரேபியாவுடனான நீண்ட, வரலாற்று பூர்வ உறவுகளை இந்தியா ஆழமாக மதிக்கிறது.  இந்த உறவு அண்மை ஆண்டுகளில் உத்திசார் ஆழத்தையும் வேகத்தையும் பெற்றுள்ளது. ராணுவம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரஸ்பரம் பயனளிக்கும் வகையிலும், கணிசமாகவும், ஒத்துழைப்பை நாம் வளர்த்து வந்துள்ளோம். பிராந்திய அமைதி, வளம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் நாங்கள் ஆர்வமும், உறுதிப்பாடும் கொண்டுள்ளோம்.

கடந்த பத்தாண்டுகளில் சவுதி அரேபியாவுக்கு நான் மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெட்டா நகருக்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். பாதுகாப்பு கூட்டாண்மை கவுன்சிலின்2-வது கூட்டத்தில் பங்கேற்பதையும், எனது சகோதரர் மேதகு இளவரசர் முகமது பின் சல்மான் 2023-ம் ஆண்டு இந்தியாவில் மேற்கொண்ட வெற்றிகரமான அரசுமுறைப் பயணத்தின் பலன்களை மேலும் வலுப்படுத்திக் கொள்வதையும் நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

நமது நாடுகளுக்கு இடையே உயிரோட்டமான பாலமாகத் திகழவும், கலாச்சாரம் மற்றும் மனித உறவுகளை வலுப்படுத்துவதில் மகத்தான பங்களிப்பை வழங்கவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் சவூதி அரேபியாவில் உள்ள துடிப்புமிக்க  இந்திய சமூகத்தினருடன் இணையவும் நான் ஆர்வமாக உள்ளேன்.

***

(Release ID: 2123341)
TS/SMB/AG/KR

 


(Release ID: 2123375) Visitor Counter : 24