உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புனித யாத்திரை ஏற்பாடுகள், சுற்றுலா சேவைகள் போன்றவற்றை மேற்கொள்வது போல இணையதள முன்பதிவு மோசடி - ஐ4சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Posted On: 19 APR 2025 10:50AM by PIB Chennai

உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய இணையதள குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையமான 4சி (I4C) இணையதளம் மூலமான முன்பதிவு மோசடிகள் குறித்து கவனமாக இருக்குமாறு பொதுமக்களை எச்சரித்துள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் மத தலங்களுக்கான யாத்திரைகள், சுற்றுலா தலங்களுக்குச் செல்வது ஆகியவற்றுக்காக முன்பதிவு செய்வதாக சிலர் போலியாக விளம்பரங்கள் செய்து கட்டணம் வசூலித்து மோசடிகளை நடத்துவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

புனித தல யாத்ரிகர்களுக்கான விருந்தினர் மாளிகை, ஹோட்டல் முன்பதிவு, வாகன முன்பதிவுகள், விடுமுறை சுற்றுலா பயணங்கள் போன்றவை தொடர்பாக இந்த மோசடிகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற விளம்பரங்களைப் பார்த்து, இந்த இணையதளங்கள் மூலம் பணம் செலுத்தும்போது, உறுதிப்படுத்தலை பெறாமலோ அல்லது சேவை எதுவும் பெறப்படாமலோ தாங்கள் ஏமாற்றப்பட்டதை வாடிக்கையாளர்கள் உணர்கிறார்கள்.

எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பணம் செலுத்துவதற்கு முன்பு எப்போதும் இணையதளங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும். அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்கள் அல்லது நம்பகமான பயண முகவர் அமைப்புகள்  மூலம் மட்டுமே முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். போலி, மோசடி தளங்கள் தொடர்பாக www.cybercrime.gov.in என்ற தளத்திலோ அல்லது 1930 என்ற எண்ணிலோ புகார் அளிக்கலாம்.

கேதார்நாத் ஹெலிகாப்டர் முன்பதிவை https://www.heliyatra.irctc.co.in என்ற இணையதளம் மூலம் செய்யலாம்.

சோம்நாத் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://somnath.org

*****

(Release ID: 2122832)

PLM/SG

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


(Release ID: 2122839) Visitor Counter : 30