கலாசாரத்துறை அமைச்சகம்
பாரம்பரிய பாதுகாப்புக்கான இந்தியாவின் பயணம்
Posted On:
17 APR 2025 4:23PM by PIB Chennai
"பாரம்பரியம் என்பது வரலாறு மட்டுமல்ல. மாறாக அது மனிதகுலத்தின் பகிரப்பட்ட முயற்சியாகும். வரலாற்று தலங்களைப் பார்க்கும் போதெல்லாம், அது தற்போதைய புவிசார் அரசியல் காரணிகளிலிருந்து நம் மனதை மேலானதாக உயர்த்துகிறது”.
~ பிரதமர் நரேந்திர மோடி
கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை கௌரவிக்கவும் அவற்றை பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது.
2024 அக்டோபர் நிலவரப்படி, 196 நாடுகளில் 1,223 உலக பாரம்பரிய தலங்கள் உள்ளன. இவற்றில் 952 கலாச்சார தலங்களாகும். 231 இயற்கை தலங்களாகும். 40 இடங்கள் இரண்டும் இணைந்த தலங்களாகும்.
இந்தியாவில் 43 உலக பாரம்பரிய தலங்கள் உள்ளன. ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால், அஜந்தா, எல்லோரா குகைகள்
போன்றவை 1983-ம் ஆண்டின் முதல் பட்டியலில் அடங்கியுள்ளன.
நமது பாரம்பரியம் வெறும் கற்கள், எழுத்துக்கள் அல்லது கட்டடங்களால் கட்டமைக்கப்படவில்லை. பழங்கால கோயில்கள், கோட்டைகள், சிற்பங்கள், தலைமுறைகளைக் கடந்த நாட்டுப்புறக் கலைகள் போன்றவற்றில் அவை உள்ளன. இந்தக் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள் போற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உலக பாரம்பரிய தினம் நினைவூடுகிறது. இந்த ஆண்டு உலக பாரம்பரிய தினத்தின் கருப்பொருள்: "பேரழிவுகள் மற்றும் மோதல்களிலிருந்து பாரம்பரியங்களைப் பாதுகாத்தல்" என்பதாகும்.
உலக பாரம்பரிய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 அன்று கொண்டாடப்படுகிறது. இது நினைவுச்சின்னங்கள், பாரம்பரிய தலங்களுக்கான சர்வதேச தினம் என்றும் அழைக்கப்படுகிறது. மனித பாரம்பரியத்தை மதிக்கவும் பாதுகாக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாரம்பரியத்தைக் கொண்டாடவும் பாதுகாக்கவும் உலகம் முழுவதும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்தியாவில் 3,697 புராதன நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய தொல்லியல் ஆய்வகம் அவற்றின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பாக உள்ளது.
பாரம்பரிய தலங்களை புதுப்பித்தல், மேம்பாடு செய்தல் போன்றவற்றின் மூலம் மத்திய அரசு முக்கிய பாரம்பரிய தலங்களுக்கு புத்துயிர் அளித்துள்ளது.
நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பது பகிரப்பட்ட பொறுப்பு என்பதை உலக பாரம்பரிய தினம் நமக்கு நினைவூட்டுகிறது. நமது வளமான பாரம்பரியம் வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.
***
(Release ID: 2122423)
TS/PLM/RR/KR
(Release ID: 2122461)
Visitor Counter : 44