தேர்தல் ஆணையம்
அரசியல் கட்சிகளின் அடிப்படை பணிகளின் பங்களிப்பை வலுப்படுத்தும் வகையில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல் முறையாக தேர்தல் ஆணையம் பயிற்சி அளிக்கிறது
Posted On:
16 APR 2025 1:17PM by PIB Chennai
பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தலைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி வழங்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. புதுதில்லியில் உள்ள ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறைகளுக்கான சர்வதேச நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள 2 நாள் பயிலரங்கில் 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 280 வாக்குச் சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் வாக்குச் சாவடி முகவர்களுக்கான பயிலரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றினர். 2025 மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மாநாட்டின் போது இந்தப் பயிற்சிக் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தேர்தல் நடைமுறைகளில் வாக்குச் சாவடி முகவர்களின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டிய தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் 1951, வாக்காளர் பதிவு விதிகள் 1960, தேர்தல் நடத்தை விதிகள் 1961ஆகிய சட்டங்கள், அவ்வப்போது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் கையேடுகள், வழிகாட்டுதல் நெறிமுறைகள், அறிவுறுத்தல்கள் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்கள் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு இந்தப் பயிலரங்கு உதவிடும் என்று தெரிவித்துள்ளது.
வாக்குச் சாவடி முகவர்களுக்கான சட்ட ரீதியிலான அமைப்புக்களின் படி அவர்களது நியமனம், பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்த கண்ணோட்டம் தொடர்பான அம்சங்கள் ஆகியவை விரிவாக விளக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல், புதுப்பித்தல் மற்றும் அதில் திருத்தங்களை மேற்கொள்ளுவதல், அது தொடர்பான படிவங்கள் உள்ளிட்ட அம்சங்களில் தேர்தல் நடைமுறைகளின் வழிகாட்டுதல் குறித்து இந்தப் பயிலரங்கில் எடுத்துரைக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் வாக்குச் சாவடி முகவர்கள் நியமிக்கப்படுகின்றனர். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-ன் பிரிவுகள் 24(ஏ) மற்றும் 24(பி) ஆகியவற்றின் கீழ் முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீடுகளைப் பயன்படுத்துவது குறித்தும் வாக்குச் சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
**
(Release ID: 2122044)
TS/SV/KPG/KR
(Release ID: 2122113)
Visitor Counter : 35