தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ரோட் டூ கேம் ஜாம் எனப்படும் டிஜிட்டல் விளையாட்டு மென்பொருள் உருவாக்கும் போட்டி
Posted On:
15 APR 2025 5:35PM by PIB Chennai
இந்தியாவின் சிறந்த இளம் இணையவழி அல்லது டிஜிட்டல் விளையாட்டு உருவாக்குபவர்கள் (கேம் டெவலப்பர்கள்) வேவ்ஸ் உச்சி மாநாடு 2025 மூலம் பிரகாசிக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
மத்திய அரசின் உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் (WAVES - வேவ்ஸ்) ஒரு பகுதியாக இந்தியாவில் படைப்போம் சவாலின் ஒரு பகுதியாக ரோட் டு கேம் ஜாம் எனப்படும் இணைய வழி விளையாட்டு மென் பொருள் போட்டி நடத்தப்படுகிறது. இதில் உருவாக்கப்பட்ட முதல் சிறந்த 10 விளையாட்டுகள் வேவ்ஸ் உச்சி மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும். இது கேமிங் எனப்படும் டிஜிட்டல் இணையவழி விளையாட்டின் எதிர்காலத்தைக் கொண்டாடுகிறது.
"ரோட் டு கேம் ஜாம்" என்பது இந்தியாவின் டிஜிட்டல் விளையாட்டு உருவாக்குபர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு அற்புதமான வாய்ப்பாகும். இந்தியாவின் 453 நகரங்களில் உள்ள 1,650 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 5,500 பதிவுகளுடன், ரோட் டூ கேம் ஜாம் போட்டி நடைபெறுகிறது.
பல சுற்றுகளைத் தொடர்ந்து, 175 அணிகள் விளையாட்டுகளை சமர்ப்பித்தன. அவை ஒவ்வொன்றும் கேமிங் துறையைச் சேர்ந்த அனுபவமிக்க நிபுணர்களின் நடுவர் குழுவால் கடுமையாக மதிப்பீடு செய்யப்பட்டன.
ரோட் டூ கேம் ஜாம் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி 10 விளையாட்டுகள் 2025 மே 1 முதல் 4 வரை மும்பையில் நடைபெறும் வேவ்ஸ் உச்சி மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும். வெற்றி பெறும் அணிகள் மும்பையில் நடைபெறும் வேவ்ஸ் உச்சி மாநாட்டில் கௌரவிக்கப்படுவார்கள். முதல் இடம் பெறும் விளையாட்டை உருவாக்கும் அணிக்கு ₹ 3.5 லட்சமும், இரண்டாம் இடத்துக்கு ₹ 2 லட்சமும், மூன்றாம் இடத்துக்கு ₹ 1.5 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
டிஜிட்டல் விளையாட்டு வளர்ச்சியில் இந்தியா வேகமாக உலகளாவிய சக்தியாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் உண்மையான பலம் அதன் நுகர்வில் மட்டுமல்ல. அதன் ஆக்கப்பூர்வமான திறனிலும் உள்ளது.
ரோட் டூ கேம் ஜாம் போட்டி, இந்தியாவின் அடுத்த தலைமுறை விளையாட்டு உருவாக்குநர்களின் மகத்தான திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல், உலகளாவிய கேமிங் அரங்கில் வழிநடத்துவதற்கான நாட்டின் திறனையும் நிரூபிக்கும். மும்பையில் நடைபெறும் வேவ்ஸ் உச்சி மாநாட்டில் தங்கள் விளையாட்டுகளை வழங்க முதல் 10 அணிகள் தயாராகி வருகின்றன. அவர்களின் பயணம் இந்தியாவை ஒரு துடிப்பான கேமிங் சந்தையாக மட்டுமல்லாமல், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மையமாகவும் நிலைநிறுத்தும்.
***
TS/PLM/RR/DL
(Release ID: 2121923)
Visitor Counter : 23