பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

14 ஆண்டுகளுக்கு முன்பு உறுதிமொழி எடுத்த திரு. ராம்பால் காஷ்யப்பை பிரதமர் சந்தித்தார்

Posted On: 14 APR 2025 7:03PM by PIB Chennai

ஹரியானா மாநிலம் யமுனா நகரில் உள்ள கைதாலில் திரு. ராம்பால் காஷ்யப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். 14 ஆண்டுகளுக்கு முன்பு திரு. காஷ்யப், பிரதமராக திரு நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரை சந்திக்கும் வரை காலணிஅணிவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டதை அறிந்து பிரதமரை திரு. நரேந்திர மோடி பெருமிதம் அடைந்தார். சமூகப் பணி, நாட்டைக் கட்டமைப்பது தொடர்பான பல்வேறு அர்த்தமுள்ள செயல்களில் மக்கள் தங்களது சக்தியை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமரை திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது

யமுனா நகரில் இன்று நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில், கைதாலில் இருந்து வந்திருந்த திரு ராம்பால் காஷ்யப் - ஜியை சந்தித்தேன். நான் பிரதமரான பிறகு தான் காலணி அணிவேன் என்று 14 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சபதம் எடுத்தார்.

திரு. ராம்பால் அவர்களைப் போன்றவர்களிடம் தாழ்மையுடன்  அவர்களது அன்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இதுபோன்ற உறுதிமொழிகளை மேற்கொள்ளும் ஒவ்வொருவரிடமும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன் – உங்கள் அன்பை நான் மிகவும் மதிக்கிறேன். தயவுசெய்து சமூக சேவை, நாட்டைக் கட்டமைப்பது போன்ற பணிகளில் தொடர்புடைய ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துங்கள்! என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஹரியானா மாநிலம் யமுனா நகரில் உள்ள கைதாலில் திரு. ராம்பால் காஷ்யப் - ஜியை சந்திக்கும் அதிர்ஷ்டம் இன்று எனக்கு கிடைத்தது. 14 ஆண்டுகளுக்கு முன்பு 'மோடி பிரதமராகும் வரை நான் காலணி அணிய மாட்டேன்' என்று அவர் சபதம் எடுத்தார். இன்று அவரை காலணி அணிய வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது போன்ற அனைத்து  நண்பர்களின் உணர்வுகளையும் நான் மதிக்கிறேன். ஆனால், அத்தகைய விரதங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக, ஏதாவது சமூக, தேசியப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது என்று அவர்கள் உறுதி ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் httpspib.gov.inPressReleasePage.aspxPRID=2121629

***

(Release ID 2121629)

TS/SV/KPG/RJ

 


(Release ID: 2121692) Visitor Counter : 17